அகரவகைக் குறியீடுகள்
akaravakaik kuṟiyīṭukaḷ
இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு.
இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு. 1500–இல் இந்த அகரவகைக் குறியீடுகள் (Alphabetic Signs) பயன்படுத்தப்பட்டன. இம்முறையில் குறியீடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். எனவே இவற்றை மனத்தில் வைப்பது எளிது. ஒவ்வொரு குறியீடும் (Sign) ஓர் ஒலியைக் குறிக்கும். உலக எழுத்து வரலாற்றில் இவை ஒரு முதிர்ந்த வளர்ச்சி நிலையைச் சுட்டும். அசை எழுத்து (Syllabary) முறையைவிட இது மேம்பட்டது. எபிரேயம் (Hebrew), உரோமானியம் (Romance) போன்ற மொழிகள் அகரவகை எழுத்துகளை உடையனவாகும். பிற்காலத்தில் தோன்றிய ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளின் எழுத்துகளும் இவ்வகையானவையே.
ஏ.சி. ஏடென் (Hadden, A.C.) என்னும் தொல்லெழுத்தியல் அறிஞர் எழுத்துமுறை வளர்ச்சியை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை, சித்திர எழுத்துகள் (Pictographs), கருத்துக்குறியீட்டு எழுத்துகள் (Ideograms), சொற்குறியீட்டு எழுத்துகள் (Verbal Signs), அசைக் குறியீட்டு எழுத்துகள் (Syllabic Signs), அகரவகைக் குறியீட்டு எழுத்துகள் (Alphabetic Signs) என்பனவாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 104)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/72tp57tr/
தமிழ்“அகரவகைக் குறியீடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/72tp57tr/APA
Oliyon Research. (2026). அகரவகைக் குறியீடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/72tp57tr/MLA
"அகரவகைக் குறியீடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/72tp57tr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment