{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/72tp57tr/", "data": {"id": "72tp57tr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/72tp57tr/", "kind": "article", "headword": "அகரவகைக் குறியீடுகள்", "romanization": "akaravakaik kuṟiyīṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.166047+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு.", "body_ta": "இவை ஒருவகை எழுத்துமுறை, சிரியாவிலும், பாலசுதீனத்திலும் வாழ்ந்துவந்த வடசெமிதிக் மக்களால் கி.மு. 1500–இல் இந்த அகரவகைக் குறியீடுகள் (Alphabetic Signs) பயன்படுத்தப்பட்டன. இம்முறையில் குறியீடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். எனவே இவற்றை மனத்தில் வைப்பது எளிது. ஒவ்வொரு குறியீடும் (Sign) ஓர் ஒலியைக் குறிக்கும். உலக எழுத்து வரலாற்றில் இவை ஒரு முதிர்ந்த வளர்ச்சி நிலையைச் சுட்டும். அசை எழுத்து (Syllabary) முறையைவிட இது மேம்பட்டது. எபிரேயம் (Hebrew), உரோமானியம் (Romance) போன்ற மொழிகள் அகரவகை எழுத்துகளை உடையனவாகும். பிற்காலத்தில் தோன்றிய ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளின் எழுத்துகளும் இவ்வகையானவையே.\n\nஏ.சி. ஏடென் (Hadden, A.C.) என்னும் தொல்லெழுத்தியல் அறிஞர் எழுத்துமுறை வளர்ச்சியை ஐந்து நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை, சித்திர எழுத்துகள் (Pictographs), கருத்துக்குறியீட்டு எழுத்துகள் (Ideograms), சொற்குறியீட்டு எழுத்துகள் (Verbal Signs), அசைக் குறியீட்டு எழுத்துகள் (Syllabic Signs), அகரவகைக் குறியீட்டு எழுத்துகள் (Alphabetic Signs) என்பனவாம்."}}