அசிட்டோபினோன்
aciṭṭōpiṉōṉ
(Acetophenone) [C6H5CO CH3]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன்.
(Acetophenone) [C6H5CO CH3]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன். இக் கீட்டோன் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கிறது. இது ஹீப்னோன் என்ற பெயருடன் ஒரு தூக்க மருந்தாகப் பயன்பட்டு வந்தது.
இது பென்சீனையும் அசிட்டைல் குளோரைடையும் அலுமினியம் குளோரைடின் உதவியால் வினைப்படுத்திப் பெறப்படுகிறது. சம மூலக்கூற்று விகிதத்தில் கால்ஷியம் அசிட்டேட்டையும் பென்சோயேட்டையும் வறட்சியில் வாலைவடித்து இதை தயாரிக்கலாம்.
இது வாதுமையைப் போன்ற மணமுடைய திரவம். இது தண்ணீரில் கரையாது. ஆனால் ஆல்கஹால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் எளிதில் கரையும். இக் கீட்டோன் செல்லுலோஸ் ஈதர்களைக் கரைக்கப் பயன்படுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 66)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vtp463b/
தமிழ்“அசிட்டோபினோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vtp463b/APA
Oliyon Research. (2026). அசிட்டோபினோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vtp463b/MLA
"அசிட்டோபினோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vtp463b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment