{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6vtp463b/", "data": {"id": "6vtp463b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6vtp463b/", "kind": "article", "headword": "அசிட்டோபினோன்", "romanization": "aciṭṭōpiṉōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.787551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acetophenone) [C6H5CO CH3]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன்.", "body_ta": "(Acetophenone) [C6H5CO CH3]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன். இக் கீட்டோன் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கிறது. இது ஹீப்னோன் என்ற பெயருடன் ஒரு தூக்க மருந்தாகப் பயன்பட்டு வந்தது.\n\nஇது பென்சீனையும் அசிட்டைல் குளோரைடையும் அலுமினியம் குளோரைடின் உதவியால் வினைப்படுத்திப் பெறப்படுகிறது. சம மூலக்கூற்று விகிதத்தில் கால்ஷியம் அசிட்டேட்டையும் பென்சோயேட்டையும் வறட்சியில் வாலைவடித்து இதை தயாரிக்கலாம்.\n\nஇது வாதுமையைப் போன்ற மணமுடைய திரவம். இது தண்ணீரில் கரையாது. ஆனால் ஆல்கஹால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் எளிதில் கரையும். இக் கீட்டோன் செல்லுலோஸ் ஈதர்களைக் கரைக்கப் பயன்படுகிறது."}}