உதாத்த அணி
utātta aṇi
தமிழ்மொழியில் அமைந்துள்ள தண்டியலங்காரம் கூறும் முப்பத்தைந்து பொருளணிகளுள் ஒன்று.
தமிழ்மொழியில் அமைந்துள்ள தண்டியலங்காரம் கூறும் முப்பத்தைந்து பொருளணிகளுள் ஒன்று. உதாத்தம் என்னும் சொல் ‘பிறிதொன்றற்கில்லாத பெருமை’ எனப் பொருள்படும். ஒருவன் பெற்றுள்ள வியக்கத்தக்க செல்வத்தின் உயர்ச்சியினையோ அவனது மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியினையோ சிறப்பித்துக் கூறுவது உதாத்த அணி எனப்படும். இதனைச் சில அணி இலக்கண நூலாசிரியர்கள் தமிழ்ப்படுத்தி, ‘வீறு கோளணி’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது செல்வ மிகுதி பற்றி அமைந்த உதாத்த அணி எனவும், உள்ள மிகுதி பற்றி அமைந்த உதாத்த அணி எனவும் இருவகையாகப் பகுத்துக் கூறப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 905)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vkrqsp5/
தமிழ்“உதாத்த அணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6vkrqsp5/APA
Oliyon Research. (2026). உதாத்த அணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vkrqsp5/MLA
"உதாத்த அணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6vkrqsp5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment