அகமது வீபிக் பாட்சா
akamatu vīpik pāṭcā
அகமது வீபிக் பாட்சா என்பவர் துருக்கி நாட்டைச் சார்ந்த அரசியல் வல்லுநர்.
அகமது வீபிக் பாட்சா என்பவர் துருக்கி நாட்டைச் சார்ந்த அரசியல் வல்லுநர். அவர் 1819–ஆம் ஆண்டில் கான்சுடாண்டி நோபிலில் பிறந்தார்; பாரிசு மாநகரில் கல்வி கற்றார். பிரான்சை உலூயி பிலிப் மன்னர் (Louis Philippe) ஆண்ட காலத்தில் பாரிசில் துருக்கி நாட்டுத் தூதரகத்தின் முதல் செயலராகப் பணியைத் தொடங்கினார் அகமது வீபிக் பாட்சா (Ahmed Vefik Pasha). அதே பொறுப்பைப் பின்னர் உருசியாவில் செயின்ட் பீட்டர்சுபர்க்கிலும் தொடர்ந்தார். இவர் 1851–இல் தான்யூப் ஆற்றைச் சுற்றியிருந்த துருக்கிப் பகுதிகளின் ஆணையராகவும் 1851 முதல் 1855 வரை பாரசீக நாட்டில் தூதராகவும் பணியாற்றியவர். மேலும் 1851-இல் நீதித்துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்றுப் பல சட்டத் திருத்தங்களைச் செய்தார், உருசியா - துருக்கிப்போரின்போது இவர் ஏட்ரியாநோபிலின் ஆளுநராகவும் 1877 இல் துருக்கி சட்ட மன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப் பெற்றார், சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது இவரைத் தலைமை அமைச்சராக 1878 இல் நியமித்தார். 1878 முதல் 1882 வரை இவர் அரசப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற காலத்தில் வேளாண்மை, பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆனால் 1882-இல் இவர்தம் அரசியல் பகைவர்கள் இவர் மீது துரோகக் குற்றஞ் சாட்டிச் சிறையிலடைத்தனர். அப்துல் அமீது இவரை விடுதலை செய்து மீண்டும் தலைமை அமைச்சராக்கினார். ஆனால் பதவியேற்ற மூன்றாம் நாள் இவரின் எதிரியான சையது பாட்சா என்பவர் தலைமை அமைச்சராக்கப் பெற்றதால் பதவியை இழந்தார். வாழ்வில் எஞ்சியிருந்த ஆண்டுகளை இவர் தமது சொந்த நாட்டுப்புற வீட்டில் கழித்தார். அகமது புகழ்பெற்ற அறிஞர்; பன்மொழிப் புலவர்; பல அகராதிகளைத் தொகுத்தவர்; பிற மொழி நூல்களையும் மொழி பெயர்த்துள்ளார். இவர் 1891–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 100)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ukmw8g4/
தமிழ்“அகமது வீபிக் பாட்சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6ukmw8g4/APA
Oliyon Research. (2026). அகமது வீபிக் பாட்சா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ukmw8g4/MLA
"அகமது வீபிக் பாட்சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6ukmw8g4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment