ஆபேல் ஜான் ஜேகப்
āpēl jāṉ jēkap
(1857-1938) அமெரிக்க உடலியல் ரசாயன விஞ்ஞானி.
(1857-1938) அமெரிக்க உடலியல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன், ஜான் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கல்வி கற்று ஐரோப்பாவில் மருத்துவம் பயின்றார். தாம் கற்ற பல்கலைக்கழகத்தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப்பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல்லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகுவிக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 437)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6sjqug7u/
தமிழ்“ஆபேல் ஜான் ஜேகப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sjqug7u/APA
Oliyon Research. (2026). ஆபேல் ஜான் ஜேகப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6sjqug7u/MLA
"ஆபேல் ஜான் ஜேகப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sjqug7u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment