இது பொருளின் துகள் அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் எந்திரம் ஆகும். அளவைக் குறைக்கும் முறை, விலை மதிப்புள்ள தாதுவிலிருந்து அகற்றும் பணியில் மிகவும் உதவுகிறது. அளவில் பெரிய பொருள்கள் முதலில் நொறுக்கப்படுகின்றன. அடுத்து, நுணுக்கமான துகள் குறைப்பிற்குச் சாணை பிடிப்பும், தூளாக்கல் முறையும் உதவுகின்றன. சாணை பிடிப்பாலை மூன்று வகைப்படும். அவை, வளைய உருளைப் பிடிப்பாலை, கவிழ்க்கும் பிடிப்பாலை, சுத்தியல் பிடிப்பாலை எனப்படும். வளைய உருளைப் பிடிப்பாலையில் வேகமாகச் சுழலும் விற்சுருள் கொண்ட உருளை வழியாகப் பொருள்கள் செலுத்தப்படுகின்றன. மெதுவாகவும், அளவாகவும் உருளும் பரப்புகள் விசையைக் கருவிக்குள் இருக்கும் பொருள்களுக்குச் செலுத்துகின்றன. இச்செயலில் உருவாகும் நுண்துகள்கள் காற்றின் மூலம் பிடிப்பாலையிலிருந்து வெளியேறுகின்றன. கவிழ்க்கும் பிடிப்பாலையில், கிடைமட்டமாகச் சுழலும் உருளையின் உள்ளே பொருள்கள் செலுத்தப்படுகின்றன. துகள்களுக்கிடையே உள்ள சுரண்டிகள், பொருள்களைச் சாணை பிடிக்கின்றன. சாணை பிடிக்கும் பொருள்களாவன: தீச்சட்டிக்கல், இரும்புப் பந்து, உருளையின் அச்சுக்கு இணையாக அமைந்துள்ள கம்பி முதலியன. சுத்தியல் பிடிப்பாலையில், ஆடக் கூடிய சுத்தியல்கள் பொருளை அதிரடி மூலமாக அளவில் குறையச் செய்யும். மிக அதிகமான நுண்ணிய ஒழுங்கான முடிவான துகள்களைக் கொண்டும், வெளியிடும் அளவைப் பொறுத்தும் தேவையான பரப்பைப் பிரிக்கலாம். மிக அதிகமான அளவு கொண்ட துகள்கள் (மூடிய பிடிப்பாலை) மீண்டும் உலோகக் குறைப்புக்கு அனுப்பப்படுகின்றன. பிற வேறுபாடுகள் சாணை பிடிப்பில் ஈரமாக, உலர்ந்ததாக அல்லது குவியலாக அல்லது தொடர் முறையாக இருக்கும். —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Hand Book, McGraw-Hill Book Company, London, 1964.