சாரஸ் கொக்கு
cāras kokku
இது, குருவிபார்மீஸ் வரிசையில் குருயிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவாகக் கொள்ளும் கொக்குகளில் வடஇந்தியாவில் பரவலாகக் காணப்படுவதாகும்.
இது, குருவிபார்மீஸ் வரிசையில் குருயிடே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவாகக் கொள்ளும் கொக்குகளில் வடஇந்தியாவில் பரவலாகக் காணப்படுவதாகும். சைபீரியாவிலிருந்து பரத்பூர் பறவைகள் புகலிடத்திற்கு வலசை வரும் வெண் கொக்கும் இக்குடும்பத்தைச் சேர்ந்ததே.
கழுகளவு உடலைக் கொண்ட சாரஸ் கொக்கு (Grus antigone) நீண்ட கால்களையும், கழுத்தையும் பெற்றிருப்பதால் ஆள் உயரமுடையதாகத் தோற்றம் தரும். கழுத்தின் மேற்பகுதியும், தலையும் சிவப்பாக இருப்பதைக் கொண்டு, இதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும், இணையாகவே காணப்படுவது எனினும், இனப்பெருக்கம் செய்யாத குளிர் காலத்தில் 60-70 வரையான குழுவாகத் திரளவும் காணலாம். அப்போது இவை பெருத்த ஆரவாரத்துடன் உரக்கக் குரல் கொடுத்து, ஆட்ட ஓட்டங்களில் ஈடுபட்டாலும், இடையிடையே இணையாகப் பிரிந்து, மீண்டும் குழுவாகத் திரண்டு கொள்ளும்.
இணை சேர்ந்த பறவைகள் வாழ்நாள் முழுதும் பிரிவதில்லை. இதன் காரணமாக, இவை பயிர்களைத் தின்று தீங்கு செய்யினும், மக்கள் இதற்குத் தீங்கிழைப்பதில்லை. தானியங்கள், முளைத்து வரும் பயிர்கள், வேர்க்கடலை ஆகியவற்றோடு தவளை, தண்டு, நத்தை, வெட்டுக்கிளி முதலிய உயிரினங்களையும் உணவாகக் கொள்கிறது. இணை சேர்ந்த பறவைகள் உரக்கக் குரல் கொடுத்து ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்ளும், இவ்வாறு குரல் கொடுக்கும் போது அரை மணித் துளி வரை கழுத்தை நீட்டி வைத்தபடி, அலகினை வான் நோக்கி உயர்த்திக் கொண்டு, உடலில் உள்ள இறகுகளை உசுப்பி உப்ப வைத்துக் கொள்ளும், இவ்வாறு குரல் கொடுப்பது பகல் இரவு பாராமல் நிகழும்.
இனப்பெருக்க காலத்தில் ஆணும், பெண்ணும் வெறி கொண்டனவாக ஆட்டம் நிகழ்த்தியே இணை சேரும். ஜூலை—டிசம்பர்த் திங்களே
இனப் பெருக்க காலம், வயலிடையேயும் குளம் குட்டைகள் நடுவே உள்ள மேட்டிலும் வைக்கோல், இலை, தழை ஆகியவற்றை ஒரு மீட்டர் குறுக்களவுள்ள குவியலாகத் திரட்டி அதன் நடுவே பழுப்பு, இளஞ்சிவப்புப் புள்ளிகளோடு கூடிய பசுமை தோய்ந்த வெண்ணிற முட்டைகள் இரண்டினை இடும். ஆணும், பெண்ணும் கூடு அமைத்தல், அடை காத்தல் ஆகியவற்றில் பங்கு பெறுகின்றன. ஆண் முட்டைகளையும் குஞ்சுகளையும் காப்பதில், அதிக கவனம் செலுத்தியபடி இருக்கும். அடைகாக்கும் காலம் 34 நாள்கள். —க. ரத்னம் நூலோதி. Salim Ali, and Ripley S. Dillon, Hand Book of the Birds of India and Pakistan, Vol.II, Oxford Press, London, 1969.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 126)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mffbukr/
தமிழ்“சாரஸ் கொக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6mffbukr/APA
Oliyon Research. (2026). சாரஸ் கொக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mffbukr/MLA
"சாரஸ் கொக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6mffbukr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment