இத்தொகுதியில் மூன்று படிக அச்சுகளும் ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும். ஆனால், அவற்றின் நீளங்கள் வெவ்வேறானவை. a ≠ b ≠ c = 90°; சமச் சீர் மையம் உண்டு. இத்தொகுதியில் பல்வேறு.அமைப்புகள் காணப்படும், அடி இணை வடிவு (basal pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. முகங்கள் இரண்டும் செங்- குத்து அச்சை (c) வெட்டுகின்றன. கிடை அச்சுக்கு இணையாக உள்ளன. பொதுக் குறியீடு (001). நீள் அச்சு இணை வடிவு (macro pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் குட்டையான கிடை அச்சை மட்டும் வெட்டுகிறது. முகங்கள் இரண்டும் நீள் அச்சுக்கு இணையானவை. பொதுக் குறியீடு (100). குறு அச்சு இணை வடிவு (brachy pinacoid). இது 2 முகங்கள் கொண்டது. முகங்கள் இரண்டும் நீளமான கிடை அச்சை மட்டும் வெட்டுகின்றன. குட்டையான அச்சுக்கு இணையாக உள்ளன. பொதுக் குறியீடு (010). பட்டகம் (prism). இது திறந்த வடிவமும், 4 முகங்களும் கொண்டது. ஒவ்வொரு முகமும் செங்குத்து அச்சுக்கு இணையாக உள்ளது. பொதுக் குறியீடு (110). நீள் அச்சு இணை கவிமாட வடிவம் (macrodome). இது 4 முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் நீள் அச்சுக்கு இணையாக உள்ளது. (h o l) குறு அச்சு இணை கவிமாட வடிவம் (brachydome). இது திறந்த உருவமும், 4 முகங்களும் கொண்டது. ஒவ்வொரு முகமும் குறை அச்சுக்கு இணையாக உள்ளது. (o k l) பட்டைக் கூம்பு (pyramid). இது 8 முகங்களைக் கொண்டது. செஞ்சாய் சதுரத் தொகுதி நேரியல் வகுப்பில் (normal class) பேரைட், கந்தகம், புட்ப ராகப் படி கங்கள் அடங்குகின்றன. —அ. வே உடையனபிள்ளை நூலோதி. W.E. Ford, Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Ltd. New Delhi, 1949.