அயோனியக் கடல்
ayōṉiyak kaṭal
அயோனியக் கடல் இத்தாலிக்கும் கிரீசின் தென்பகுதிக்கும் இடையேயுள்ள மத்தியதரைக் கடற்பகுதி; ஆட்ரான்ட்டோ ஜலசந்தி இக்கடலுக்கும் ஏட்ரியாடிக் கடலுக்கும் இடையே உள்ளது.
அயோனியக் கடல் இத்தாலிக்கும் கிரீசின் தென்பகுதிக்கும் இடையேயுள்ள மத்தியதரைக் கடற்பகுதி; ஆட்ரான்ட்டோ ஜலசந்தி இக்கடலுக்கும் ஏட்ரியாடிக் கடலுக்கும் இடையே உள்ளது. கிரீசின் மேலைக் கடற்கரையில் இக்கடல் குடைந்துள்ள பெரிய உள்வாய்தான் காரிந்த் வளைகுடா என்பது. சிசிலிக்கும் கிரீசின் தென்பகுதியான மாட்டபான் முனைக்கும் இடையே 420 மைல் தூரம் இருக்கிறது. புராதன கிரேக்கக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள அயோ என்பவள் பெயரால் இக்கடல் பெயரிடப் பெற்றது. அயோவை ஜூபிட்டர் ஓர் எருமையாக மாற்றிவிட்டான். தன்னைக் கடிக்க வந்த ஓர் உண்ணியின் தொந்தரவைத் தாங்கமாட்டாமல் அயோ இக்கடலைக் கடந்து நீந்திச் செல்ல முயன்றதால் இக்கடல் இப்பெயர் பெற்றது என்பது கிரேக்கக் கதை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 180)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6e7ge7zm/
தமிழ்“அயோனியக் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6e7ge7zm/APA
Oliyon Research. (2026). அயோனியக் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6e7ge7zm/MLA
"அயோனியக் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6e7ge7zm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment