அதிதாரத்தாயி என்பது கருநாடக இசையில் தாரத்தாயிக்கு மேல் உள்ள ஒலி எல்லையினைக் குறிக்கும். இதைக் குரலால் பாடமுடியாது. இசைக் கருவிகளிலும் சிலவற்றால்தான் இசைக்க முடியும். இதைச் சுரங்கட்கு மேலே இரண்டு புள்ளிகள் வைத்துக் குறிப்பிடுவர்.