கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், கிறித்தவ சமயத்தவர்; பிறமொழிக்கும் தமிழ் மொழிக்குமான இருமொழி அகராதி இயற்றும் முயற்சி மேற்கொண்டவர். ‘இந்துத்தானும் தமிழுமான சொன்மாலை’ என்னும் நூலினைச் செய்துள்ளார். கி.பி. 1878–இல் வெளியான இந்நூல், தமிழிலமைந்துள்ள இருமொழி அகராதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.