நுரையீரல் மேல் தோல் அழற்சி
nuraiyīral mēl tōl aḻaṟci
நுரையீரல்களின் மேல் தோலில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியினை நுரையீரல் மேல் தோல் அழற்சி என்பர்.
நுரையீரல்களின் மேல் தோலில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியினை நுரையீரல் மேல் தோல் அழற்சி என்பர். இந்நோய் மிக அரிதாகக் காணப்படும். பொதுவாக, இந்நோய் புற அதிர்ச்சிப் புண்ணினால், மார்பு கூட்டின் சுவரில் துளை ஏற்படுவதாலோ, கூர்மையான வெளிப் பொருள்களினால், உதர விதானத்தில் ஏற்படும் துளையினாலோ, முதன்மையாகத் தோற்றுவிக்கப் படும். மேலும், சளிக் காய்ச்சல், நுரையீரல் சீழ்க் கட்டு, துளைத்துச் செல்லும் தன்மை கொண்ட புண், அடி வயிற்றின் உட்புறம் உள்ள இரட்டைப் படையின் அழற்சி, புற்று நோய்க் கட்டு, குருதி நஞ்சூட்டு, உணவுக் குழாயில் உண்டாகும் துளை போன்ற பல தொடர்பில்லாத, தெரிந்த இரண்டாம் தரக் காரணங்களாலும் ஏற்படும்.
அறிகுறி. சுவாச இயக்கத்தின் போது, வலி காணப் படுதல். விரைந்து மூச்சு விடுதல், நுரையீரல்களின் திடீர்ச் சுருக்கத்தினால் ஏற்படும் மூச்சுத் திணறல், சற்றே வேகம் குறைந்த அழற்சியினைத் தொடர்ந்து ஏற்படும் சீழ்க் கட்டி, உடலின் இயல் தட்ப வெப்ப நிலையில் நாடித் துடிப்பில் உயர்ந்து காணப் படுதல், பசியின்மை போன்றவை நோயறிகுறிகளாகும். நோய் பாதித்த கால்நடைகள் முட்டியை விலக்கி வைத்து நிற்கும். இடம் விட்டு இடம் நகர்வதற்கு விருப்பமில்லாமல் காணப் படும். நுரையீரல் இயக்க ஆய்வு (auscultation) செய்யும் போது உராய்தல் போன்ற ஒலி கேட்கும். மார்புச் சுவரினை அழுத்தும் போது, வலி அறிகுறிகள் காணப் படும். நோயின் தன்மையினை அறிய விரல் கொண்டு, மெதுவாகத் தட்டிச் சோதனை செய்யும் போது, மந்த நிலை காணப் படும். புற நோய்க் குறிகளின் அடிப்படையில் இந்நோயினை உறுதி செய்யலாம்.
மருத்துவம். நோயின் காரணத்திற்கு ஏற்ற படி, உயிர் எதிரி (antibiotics) அல்லது சால்ஃபான் அமைடு (sulphanamide) போன்ற மருந்துகளைத் தக்கவாறு பயன் படுத்தி, மருத்துவம் செய்யலாம். கடுகு பசையினை மார்புக் கூட்டின் மேல் கட்டுதல், வெப்பமான கம்பளம் கொண்டு மார்புப் பகுதியினை மூடுதல் போன்றவை பயனளிக்கும். நுரையீரல் மேல் தோல் நீர்ப் பையில் இருந்து, அதிகமான நீரினை உறிஞ்சி எடுப்பது, நுண்ணுயிரிகளின் எதிர்ப்புத் திறன் கொண்ட மருந்து பொருள்களை நுரையீரல் மேல் தோல் நீர்ப் பையினுள் ஊசி மூலம் நேரிடையாகச்செலுத்துதல் ஆகியவையும் நன்மை பயக்கும். நோயகற்றும் மருந்து, அதிர்ச்சி எதிர்ப்பு மருந்து. சத்துள்ள உணவு ஆகியவை மிக இன்றியமையாதவை. சிறுநீர் கழிக்கும் குழாயினை (Catheter) உள்ளுறையில் இருக்கும்படிச் செய்தல், சிறிது சிறிதாக முறையான வடிகால் அமைத்துக் கெட்ட நீரினை வெளியேற்றுதல் ஆகியவையும் குறிப்பிடத் தக்கவை. இந்நோய்த் தீர்க்கும் முறை மார்புக் கூட்டினுள் இரு பக்கத்திலும் கெட்டநீர் முழுமையாக அகற்றப் படும் வரை தொடரப் பட வேண்டும். மேலும், சளிக் காய்ச்சலுக்குச் செய்யும் மருத்துவ முறைகளையும், பின் பற்றலாம். நொதிகளைப் (Enzymes) பயன் படுத்தி, இந்நோயினை குணமாக்கலாம். மேலும், நோய் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அதனைக் கட்டுப் படுத்தத் தேவையான மருந்துகளைப் பயன் படுத்தலாம். —ப. முத்துக்கிருட்டிணன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 120)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zbthbr2/
தமிழ்“நுரையீரல் மேல் தோல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5zbthbr2/APA
Oliyon Research. (2026). நுரையீரல் மேல் தோல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zbthbr2/MLA
"நுரையீரல் மேல் தோல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5zbthbr2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment