என்போர் யாகங்களை நடத்தும் வேதகாலப் புரோகிதர்களுள் ஒருவகையினர். இருக்கு வேதகாலத்தில் இருக்கு சம்கிதைகளைப் பாடியவர்களை ஓத்ரி (Hotri) என்றனர். ஆனால் பிந்தைய வேதகாலத்தில் யசுர்வேத சம்கிதை, மந்திரங்களைக் கொண்டு விளங்கியது. இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்த புரோகிதர்களை அதவர்யூ (Adhvaryu) பூசாரிகள் என்றனர். யசுர்வேத யாகங்களைச் செய்யும்போது அது தொடர்பான உடலுழைப்புப் பணிகளையும் அவர்கள் செய்யுக் கடமைப்- பட்டவர்கள். இருக்குவேத காலத்தில் ஏழு சாதிகளாகப் பிரிந்து இருந்த பூசாரிகள் பிந்தைய வேத காலத்தில் பதினேழு சாதிகளாக உயர்ந்தனர். அக்காலத்தில் அவர்களின் செல்வாக்கும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.