இராமனதீச்சரம்
irāmaṉatīccaram
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று.
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. இவ்வூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள நன்னிலத்திற்கு 5 கல் தொலைவிலுள்ளது; திருநாவுக்கரசர் வீடுபேறெய்திய திருத்தலமாகிய திருப்புகலூருக்கு அண்மையில், முடி கொண்டான் ஆற்றினைக் கடந்து திருக்கண்ணபுரம் என்னும் வைணவத் தலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. ஈச்சரம் என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். இவ்வாறமையும் திருக்கோயிலின் பெயரே ஊர்க்குப் பெயராக வழங்குவதும் உண்டு. இது இராமன் சிவ பெருமானை வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. இராமன் வழிபட்ட சிவன் கோயில் உள்ள திருத்தலமாதலின் இது இராமனதீச்சரம் எனப்பட்டது. இறைவன் பெயர் இராமநாதன்; இறைவி பெயர் கருவார்குழலி, இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் இராமதீர்த்தம் எனப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 141)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mdtmp4v/
தமிழ்“இராமனதீச்சரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5mdtmp4v/APA
Oliyon Research. (2026). இராமனதீச்சரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5mdtmp4v/MLA
"இராமனதீச்சரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5mdtmp4v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment