சங்ககாலத்தில் வாழ்ந்த சிறந்த வள்ளலாகிய வெளிமான் என்பானின் தம்பி. புவவர்களைப் போற்றும் பண்பும் அவர்கட்கு வழங்கும் பண்பும் குறைந்தவன். ஒரு கால், வறுமையிலும் செம்மை சான்ற புலவராகிய பெருஞ்சித்திரனார் பரிசில் விரும்பி வெளிமானிடம் சென்றார். இறக்கும் நிலையிலிருந்த அவ்வள்ளல் தன் தம்பியாகிய இவனைப் பரிசில் கொடுக்குமாறு பணித்தான். இவனைப் புலவர்க்குச் சிறிதே கொடுக்க, அதனைப் பெறாது நீங்கிக் குமணன்பால் சென்று பாடிப் பெற்ற யானைப் பரிசிலை, வெளிமான் ஊர்க்கு வந்து, அவனுடைய காவன் மரத்தே கட்டி விடுத்துச் சென்றார் (புறம். 163. அடிக்குறிப்பு) அப்போது, ‘இரவலர் புரவலர் நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர், இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு ஈவோருண்மையும் காணினி’ என்று இகழ்ந்து பாடிச் சென்றார். வெளிமான் இறந்த பின்னர் இளவெளிமானிடம் இப்புலவர் சென்றபோதும் இவன் சிறிதே கொடுக்க, அதனைக் கொள்ளாது, ‘புலிபார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றாதாகும்’ எனத் தம் பெருமை புலப்படப் புகன்று மீண்டார். பிறிதோரமையம், வெளிமான் சிறிது கொடுக்கக் கண்டு அதனைப் பெறாது புலவர், ‘அகம் நக வாரா முகன் அழி பரிசில், தாள் இலாளர் வேளார் அல்லர்’ என்றும், ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ என்றும், தம் மானவுணர்வும் தம்போன்றோரை மதித்துப் போற்றும் புரவலர் உண்மையும் தோன்றக் கூறிச் சென்றார் (புறம். 207).