தகவல் தள வினா
takaval taḷa viṉā
பொருள்கள் · Senses
1.
ஒவ்வொரு தகவல் தள மேலாண்மை முறையும் நிகழ்நிரல் மொழியை ஒத்த மொழி ஒன்றை அரவணைக்கிறது. இம்மொழிக்கு கட்டமைப்பு வினா மொழி, கவிமொ என்று பெயர். ஆங்கிலத்திற்கு மிக நெருக்கமான கூற்றுகளைப் பயன்படுத்தித் தகவல் தளத்துடன் தொடர்பு கொள்வதற்குகாக இது சிறப்பாக அமைக்கப்பட்டது. இம்மொழி மூலம் பின்வருவனவற்றைச் செய்யலாம்: 1) பதிவுருக்களை இடங்காணத் தகவல் தளத்தைத் தேடல், 2) பதிவுருக்களை மேம்படுத்த அட்டவணைகளுக்கிடையே இணைப்புகளை நிறுவுதல், 3) பதிவுருக்ககளின் துணைத் தொகுதிப் பட்டியலைத் தேடுதல், 4) கணக்கீடுகள் செய்தல், 5) பழைய பதிவுருக்களை நீக்கல், 6) பிற தகவல் மேலாண்மைப் பணிகளைச் செய்தல். ஓர் அட்டவணையிலுள்ள தகவலின் சிறப்புக் கருத்துகளாக வினாக்களைக் கருதலாம். இவ்வினாவிலிருந்து பெறும் முடிவை எப்பொழுதும் தனியாகச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது காணலாம்
— data base querying
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ewbdspb/
தமிழ்“தகவல் தள வினா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ewbdspb/APA
Oliyon Research. (2026). தகவல் தள வினா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ewbdspb/MLA
"தகவல் தள வினா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ewbdspb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment