சிலை
cilai
சிலை (தனுசு)
சிலை (தனுசு)
வட வான கோளத்தில் உள்ள கோடைக் கால விண் மீன் குழுவான சிலை (Sagittarius), நளி (scorpius) விண் மீன் குழுவிற்கும், சுறவம் (Pisces) விண் மீன் குழுவிற்கும் இடையே அமைந்துள்ளது. இதை தனுசு இராசி என்பர். இது இராசிக் சக்கரத்தில் ஒன்பதாம் இராசியாகும். இதன் வல ஏற்றம் (right ascension) 19 மணி ஆகும். நடு வரை விலக்கம் (declination) 25° தெற்கு ஆகும். இக்குழுவை ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வட வானக் கோளத்தின் நடுவில் காணலாம். இதை எ.எ. பர்னார்டு என்பார் 1866ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.
இவ்விண் மீன் குழுவில் உள்ள விண் மீன்களில் மிக வெளிச்சமுடையது e—சாஜிட்டாரி (e—Sagittari) எனப்படும் காஸ் ஆஸ்ட்ரலிஸ் (Kaus Australis) விண் மீன் ஆகும். இதன் பொலிவு பரிமாணம் (magnitude) இரண்டு ஆகும். மேலும், மூன்றாம் பொலிவு பரிமாணமுடைய ஏழு விண் மீன்கள் இக்குழுவில் உள்ளன. இக்குழுவில் கோள் முகில்கள் (clouds), ஒமேகா (Omega), லாகூன் (Lagoon), ட்ரைஃபைடு (trifid) ஆகிய ஒண்முகிற் படலங்களும், M, M, M போன்ற கோளக விண் மீன் முடிச்சுகளும் (globular clusters) உள்ளன. இவ்விண் மீன், வானக் கோளத்தில் 867.4 சதுரப் பாகை இடத்தை நிரப்பிக் கொண்டுள்ளது. —பெ. வடிவேல்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 305)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5cm7hryw/
தமிழ்“சிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5cm7hryw/APA
Oliyon Research. (2026). சிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5cm7hryw/MLA
"சிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5cm7hryw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment