இரைதாசர்
iraitācar
கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயத்தலைவர்களுள் ஒருவர்.
கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயத்தலைவர்களுள் ஒருவர். இவர் சக்கிலியர் குடும்பம் ஒன்றில் பிறந்த மெய்யடியார். இவர் வாரணாசியில் தோல் தொழிலாளியாகப் பணி- யாற்றினார். இடிபாடுகளுடன் நொடிந்திருந்த குடிசையில் வாழ்ந்த இரைதாசர் (Raidas), செருப்புகளைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் எளிய வாழ்வு வாழ்ந்து, போதுமென்ற மனத்துடன் அறவாழ்வு வாழ்ந்தவர். இந்து சமயத்தையும் இசுலாம் சமயத்தையும் ஒன்றுபடுத்த விழைந்த இரைதாசர், இறைவனைப் பற்றிய தத்துவங்களிலோ அவரைக் குறித்துப் பாடும் அழகான கவிதைகளிலோ ஈடுபடவில்லை. இவருடைய கருத்துகள் மனிதத் தன்மையை வலியுறுத்துவன. மறுபிறப்பையோ நாம் வாழும் உலகம் இறைவனின் விளையாடுமிடம் என்னும் கருத்தையோ இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இறைவனிடத்தில் முழுமையான ஒப்படைப்பு ஒன்றையே இரைதாசர் வலியுறுத்தினார். ‘அரியே அனைத்தும், அனைத்தும் அரியே’ என்பது இரைதாசரின் சிறந்த கோட்பாடாகும். பக்தி இயக்கம் இந்தியாவில் சிறந்து விளங்கிய காலத்தில் அவ்வியக்கத்தின் ஞானியருள் ஒருவராக இவர் திகழ்ந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 252)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5552cw94/
தமிழ்“இரைதாசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5552cw94/APA
Oliyon Research. (2026). இரைதாசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5552cw94/MLA
"இரைதாசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5552cw94/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment