அய்யனார்
ayyaṉār
அரிக்கும் அரனுக்கும் மகனாகப் பிறந்தவர்.
அரிக்கும் அரனுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு ஆயுதம் வளை, செண்டு; வாகனம் குதிரை, யானையாகும். இவரைச் சாத்தா என்றும் அழைப்பர்.
தாருகாவனத்து இருடிகள் அவர்தம் மனைவியர் ஆகியோரின் ஆணவ இறுமாப்பினை அடக்குவதற்கு
அய்யனார்
அரியும் அரனும் எழுந்தருளிய காலத்து, மோகினியாகி நின்ற மகாவிட்டுணுவின்பால் அரனுக்கு மகனாகத் தோன்றியவர்.
சிற்றூரைப் பாதுகாக்க ஊருணிக் கரையில் இவருக்குக் கோயில் அமைக்கப்பெற்று வழிபாடு நடைபெற்று வருகிறது. மழை வேண்டிக் காவல் தெய்வமாகிய இவரை வழிபடுவதும் உண்டு. திருட்டு, தொத்துநோய், பேய்பூதங்கள், புயற்காற்று, வெள்ளம் முதலிய இயற்கையின் கொடுமைகளிலிருந்து ஊர் மக்களைக் காப்பாற்றுவதும், அவர்களுக்குக் குழந்தைப் பேறு அளிப்பதுவும் இத்தெய்வத்தின் செயல்களாகக் கருதப்படுகின்றன.
அய்யனாரின் சிலை கரடுமுருடான கல் உருவமாகவோ களிமண் உருவமாகவோ அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் சுடப்பட்ட மண் உருவங்களாக அமைக்கப்படும். இச்சிலை அமைப்பு கிராமியக் கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இவரது அருளைப் பெறச் சிறப்புக் கொடுத்தல், தீ மிதித்தல், சந்தனக் குடம் எடுத்தல் போன்ற சடங்குகளை ஊர்மக்கள் செய்வர். கண் முதலிய உறுப்புகளை வெள்ளியில் செய்து வைப்பர். குதிரைகளையும் காணிக்கையாக்குவர். தீராத வழக்குகளைத் தீர்த்து வைப்பதும், காணாமல் போகும் பொருள்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதும் இவர் தம் அருட்செயலாகும் என்பது நம்பிக்கை.சு.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 548)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4vrfvqkz/
தமிழ்“அய்யனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4vrfvqkz/APA
Oliyon Research. (2026). அய்யனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4vrfvqkz/MLA
"அய்யனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4vrfvqkz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment