தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும்

tolkāppiyamum caivacittāntamum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறை ஞான தேசிகர் இதனை ஓர் அளவை நூலாகக் கொள்கின்றார். மொழி இலக்கணத்தைக் கொண்டு உலக இலக்கணத்தை அவர் தம் மதிநுட்பத்தால் தெளிவுபடுத்துவது கருத்திற்கு விருந்து இந்நூல் சித்தாந்தக் கருத்துகளுக்கும் இடமளிக்கிறது. :இதில் எழுத்து, திணை, அகம், புறம் பற்றி வருவன எல்லாம் இக்கருத்துகளைக் கொண்டவை. எ-டு 1) எழுத்து வகை - முப்பொருள்கள்-2) பால்வரை தெய்வம் 3) கந்தழி. வினையே செய்வது செயப்படுபொருளே நிலனே காலம் கருவி என்றா இன்னதற்கு இதுபயன் ஆகஎன்னும் அன்னமரபின் இரண்டொடுந்தொகை ஆயெட்டு என்ப தொழில்முதனிலையே ::: இந்நூற்பாவிற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள தொடர்பை மறைஞான தேசிகர் பின்வருமாறு: ::: "வினை - ஆன்மாக்கள் செய்யுந்தொழில். ஆன்மா செய்யப்படுபொருள்-செய்பவன். செய்வது இருவினை. நிலனே அவ்வான்மாக்கள் இருக்கும் புவனம். காலம்-முக்காலங்களையும் உண்டாக்கும் காலத்தன்மை :::கருவி -36 தத்துவம். :::இன்னதற்கு இருவினைப் பயன்களைப் புசிக்க வேண்டிய காரணம். இது பயன் சுகதுக்கங்களைப் புசித்துத் தொலைத்த பின் கன்ம க்ஷயம் பிறந்து மோட்சம் அடைக என அறிக”.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ka6p4kd/

தமிழ்
“தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ka6p4kd/
APA
Oliyon Research. (2026). தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ka6p4kd/
MLA
"தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ka6p4kd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment