{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ka6p4kd/", "data": {"id": "4ka6p4kd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ka6p4kd/", "kind": "word", "headword": "தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும்", "romanization": "tolkāppiyamum caivacittāntamum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:24.091444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மறை ஞான தேசிகர் இதனை ஓர் அளவை நூலாகக் கொள்கின்றார். மொழி இலக்கணத்தைக் கொண்டு உலக இலக்கணத்தை அவர் தம் மதிநுட்பத்தால் தெளிவுபடுத்துவது கருத்திற்கு விருந்து இந்நூல் சித்தாந்தக் கருத்துகளுக்கும் இடமளிக்கிறது. :இதில் எழுத்து, திணை, அகம், புறம் பற்றி வருவன எல்லாம் இக்கருத்துகளைக் கொண்டவை. எ-டு 1) எழுத்து வகை - முப்பொருள்கள்-2) பால்வரை தெய்வம் 3) கந்தழி. வினையே செய்வது செயப்படுபொருளே நிலனே காலம் கருவி என்றா இன்னதற்கு இதுபயன் ஆகஎன்னும் அன்னமரபின் இரண்டொடுந்தொகை ஆயெட்டு என்ப தொழில்முதனிலையே ::: இந்நூற்பாவிற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள தொடர்பை மறைஞான தேசிகர் பின்வருமாறு: ::: \"வினை - ஆன்மாக்கள் செய்யுந்தொழில். ஆன்மா செய்யப்படுபொருள்-செய்பவன். செய்வது இருவினை. நிலனே அவ்வான்மாக்கள் இருக்கும் புவனம். காலம்-முக்காலங்களையும் உண்டாக்கும் காலத்தன்மை :::கருவி -36 தத்துவம். :::இன்னதற்கு இருவினைப் பயன்களைப் புசிக்க வேண்டிய காரணம். இது பயன் சுகதுக்கங்களைப் புசித்துத் தொலைத்த பின் கன்ம க்ஷயம் பிறந்து மோட்சம் அடைக என அறிக”.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}