உற்பத்தி அளவின் இறுதிநிலைச் செலவு என்பது, ஓர் அலகைக் கூடுதலாக உற்பத்தி செய்வதால் ஏற்படும் மொத்தச் செலவின் மிகுதியாகும். இறுதிநிலை அலகை உற்பத்தி செய்வதால் ஏற்படும் செலவு இறுதிநிலைச் செலவு ஆகும். :MC = TC – TC :MC — இறுதிநிலைச் செலவு; :TC — மொத்தச் செலவு; :n — அலகுகளின் எண்ணிக்கை. இறுதிநிலைச் செலவின் சிறப்பு கொடுக்கப்பட்ட சூழ்நிலைவில் ஒரு தனிப்பட்ட தொழில் நிறுவனத்தின் போக்கை அறிந்துகொள்ள இறுதிநிலைச் செலவு உதவியாக உள்ளது. ஒரு தொழில் நிறுவனத்தின் இன்றியமையாக் கொள்கை ஆதாயத்தை உச்ச நிலைப்படுத்துவது ஆகும். இறுநிநிலைச் செலவும் இறுதிநிலை வருவாயும் ஒரே நிலையிலிருக்கும்போது தொழில் நிறுவனம் உச்ச ஆதாயத்தை அடைகிறது. இறுதிநிலைச் செலவு இறுதிநிலை வருவாய்க்குக் குறைவாக இருந்தால் ஆதாயம் உச்சநிலையில் இருக்காது. அதுபோன்றே இறுதிநிலைச் செலவு இறுதிநிலை வருவாய்க்கு மிகுதியாக இருந்தால் இழப்பு ஏற்படும். எனவே, உற்பத்தி குறைய வேண்டும். எனவே, இறுதிநிலைச் செலவு = இறுதிநிலை வருவாய் என்ற நிலையில் ஆதாயம் உச்சநிலையை அடைகிறது. நிறைவுப் போட்டியில் ஒரு நிறுவனத்தின் இறுதி நிலை வருவாயும் விலையும் ஒப்பானதாக இருக்கும். ஆகவே, இறுதிநிலை வருவாய் = இறுதிநிலைச் செலவு = விலை என்ற ஓர் உறவு இந்நிலையில் ஏற்படுகிறது. சராசரி ஆக்கச் செலவும் இறுதிநிலை உற்பத்திச் செலவும் நீண்டகாலத்தில் எல்லா நிறுவனங்களுக்குகும் ஒப்பானதாக (Equal) நிறைவுப் போட்டியில் (Perfect Competition) இருக்கும். சராசரிச் செலவுக்கும் இறுதிநிலைச் செவவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சராசரிச் செலவு நேர் கோடாக இருந்தால் இறுதிநிலைச் செலவுக் கோடு அத்துடன் இணையும். சராசரிச் செலவு மிகுந்தால் இறுதிநிலைச் செலவு அதைவிட மிகுதியாகும். சராசரிச் செலவு குறைந்தால் இறுதிநிலைச் செலவு அதைவிட வேகமாகக் குறையும். இவற்றை வரைபடத்தில் காணலாம். சராசரித் செலவு குறைந்து பின் மிகுந்தால், இறுதிநிலைச் செலவும் வேகமாகக் குறைந்து பின்பு அதிக அளவில் உயர்கிறது. நிறுவனம் சமநிலையை அடையும் நிலையில் இறுதிநிலைச் செலவுக்கோடு சராசரிச் செலவுக்கோட்டைக் கீழிருந்து மேல்நோக்கி வெட்டிக் கொண்டு செல்லும், சராசரிச் செலவுக்கும் இறுதிநிலைச் செலவுக்கும் உண்டான உறவு குறைந்த காலத்திற்கும் நீண்ட காலத்திற்கும் பொருந்தும். எஸ்.பெ.