சூரியக் காந்தப் புலம்
cūriyak kāntap pulam
சூரியனிலுள்ள அயனியாக்கப்படும் மீ கடத்தும் வளிமங்களால் ஏற்படும் காந்தப் புலம் சூரியக் காந்தப் புலம் (solar magnetic field) எனப்படும்.
சூரியனிலுள்ள அயனியாக்கப்படும் மீ கடத்தும் வளிமங்களால் ஏற்படும் காந்தப் புலம் சூரியக் காந்தப் புலம் (solar magnetic field) எனப்படும். இக்காந்தப் புலத்தின் தன்மை, சூரியனின் மேற்பரப்பு ஒளியைக் கொண்டு பெறப் படுகிறது. காந்தப் பாய்ம இயக்கவியல் கொள்கையிலிருந்தும், சூரியப் புள்ளிப் பண்புகளிலிருந்தும், துணைப் பரப்புப் புலத்தை உணர முடியும். சூரியப் பிதுக்கம் (solar prominence), தீக்கொழுந்துகள் (flares), ஒளி வட்டப் பாயல்கள் (coronal streamers), சூரியக் காற்று, பிளாஸ்மா வெளியீடு ஆகியவற்றிலிருந்து சூரியனின் புறக் காந்த விளைவைக் காண முடியும்.
சூரியக் காந்தப் புலத்தின் சிக்கலான பட்டைகளின் வலிமையையும், தன்மையையும் அளவிடச் சூரியக் காந்த வரைவி (solar magnetograph) பயன் படுகிறது. இது சீமென் விளைவை அடிப்படையாகக் கொண்டது. இதில், சூரியனின் அமைப்பைக் காணத் தொலை நோக்கியும், சுழல் முனைவாக்கத்திற்கான வகையீட்டுப் பகுப்பியும் (differential analyzer) உள்ளன. காந்தப் புலத்தால் ஏற்படும் நுட்பமான நிரல்களின் சீமென் பிளவை (zeeman splitting) அறிய, நிற மாலை வரைவியும் (spectrograph) குறை புலத்தை (10-4 டெஸ்லா) அறிய ஒளி மின் அளவியும் பயன்படுகின்றன.
சிறு அளவீட்டு முறையில், சூரியனின் ஒளி அடுக்குகளின் கொந்தளிப்பு, சலனம் இவற்றால் சூரியக் காந்தப் பட்டைகள் அடிக்கடி மாறிக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் இட அமைவு மற்றும் பல பண்புகளால் அவை பெரிய அளவீட்டுப் பாய்மக் காந்தச் சுற்றாக எதிரொளிக்கின்றன. இக்காந்தச் சுற்று. மாறுபடும் அதிர்வெண்களைக் கொண்ட சூரியப் புள்ளிகளுக்கும், அவற்றின் சூரிய எதிரொளிப்பின் கிடைக்கைக் குறைவிற்கும், தக்க சான்றாக அமைகிறது. அவற்றின் சிறப்புக் காந்த முனைவுத் தன்மையின் (ஹேல் விதி) காலம் 22 ஆண்டு ஆகும்.
சூரியப் புள்ளியில், காந்தப் புலச் செறிவு 0.1–0.3 டெஸ்லாவாக இருக்கும் போது, காந்தப் புல வரிகள் (magnetic field lines) நெருக்கமாக அமைகின்றன. இந்தப் புலம் மிகுதியாக இருக்கும் போது, கொந்தளிப்பைத் தடை செய்யும். மேலும், பரப்பின் வெளியீட்டு ஆற்றலையும் குறைக்கிறது. புள்ளிகள் கருமையாக அமைந்துள்ளன. சூரியனின் இரு துருவங்களும்வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன. முடிவிலாச் சுருள் பட்டைகளின் உள்ளீட்டுக் காந்தப் புலப் பெருக்கத்தால், சூரியப் புள்ளித் தொகுதிகள் உண்டாகின்றன. சூரியனின் வேறுபாட்டு இயக்கத்தால், இந்த உள்ளீட்டுப் பெருக்கம் நிகழ்கிறது. புறப் பரப்பில் உள்ள காந்தப் பாய வளையங்கள். இரு முனைச் சூரியப் புள்ளித் தொகுதிகளைத் தோற்றுவிக்கின்றன. காந்தப் புலம் குறையும் போது, இந்தப் புள்ளித் தொகுதிகள் மறைகின்றன.
சூரியக் காந்தப் புலத்தின் சிதைவு காலம், சூரிய மண்டலம் தோன்றிய காலத்துடன் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கொரு முறை சூரியனின் துருவங்களின் காந்தப் புலத் தன்மை ஒன்றையொன்று மாற்றிக் கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே சூரியக் காந்தச் சுற்று எனப்படுகிறது. —பெ. துரைசாமி நூலோதி. M.P. Agarwal, Solar Energy, S. Chand and Co, New Delhi, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 618)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4jk65wcv/
தமிழ்“சூரியக் காந்தப் புலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4jk65wcv/APA
Oliyon Research. (2026). சூரியக் காந்தப் புலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4jk65wcv/MLA
"சூரியக் காந்தப் புலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4jk65wcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment