சிரசுச் சிற்றுடல் கழலையம்
ciracuc ciṟṟuṭal kaḻalaiyam
சிரசுப் பகுதிக்குக் குருதியை எடுத்துச் செல்லும் தலைத் தமனி இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது கரோடிட் சிற்றுடல் இது குருதியில் ஏற்படும் ஹைட்ரஜன் அயனி மாற்றத்தையும் வெப்பத்தையும் அறியும் ஒரு வேதி வாங்கித் திசுவாகும்.
சிரசுப் பகுதிக்குக் குருதியை எடுத்துச் செல்லும் தலைத் தமனி இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது கரோடிட் சிற்றுடல் இது குருதியில் ஏற்படும் ஹைட்ரஜன் அயனி மாற்றத்தையும் வெப்பத்தையும் அறியும் ஒரு வேதி வாங்கித் திசுவாகும். இத்திசுவில் வரும் கட்டிகளைச் சிரசுச் சிற்றுடல் கழலையம், சிரசுச் சிற்றுடல் கழலையம் அல்லது உருளைக் கிழங்குக் கட்டி (potato tumour) என்பர்.
உருப்பெருக்கி மூலம் இக்கட்டித் திசுவை நோக்க, நிறமேற்காத பரகாங்குளியோனோமாவை (paraganglionoma) ஒத்த கட்டியாகக் காணப்படுவதால், இதைக் கீமோடெக்டோமா (chemodectoma) என்றும் கூறலாம். தீங்கற்ற கட்டிகளாகக் கருதப்பட்டு வந்த இக்கட்டிகள் 20% அடுத்துப் பரவுவதுடன் அரிதாக வேறிடத்திற்கும் பரவலாம்.
நோய்க் குறிகள். தலைத் தமனியின் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும் இக்கட்டியை, கழுத்தில் தோன்றும் பிற கடினமான கட்டிகளிலிருந்து பிரித்தறிவது எளிதன்று. ஏனென்றால், தமனியுடன் இருந்தாலும், துடிப்பை எளிதில் கடத்துவதில்லை.30—40 வயதில் தொடங்கும் இக்கட்டி மெதுவாகவே வளர்வதால், ஆய்வின் போது ஓர் உருளைக் கிழங்கு அளவு பருத்துக் காணப்படும். மெதுவாக வளரும் தன்மையும் தலைத் தமனி பிரியும் இடத்தில் காணப்படும். புறத் தலைத் தமனிக் கட்டி மேல் செல்வதையும், கட்டியைப் பக்கவாட்டில் அசைப்பதுடன், மேலும் கீழும் அசைக்க முடியாமையையும் கொண்டு இதைச் சிரசுச் சிற்றுடல் கழலையம் என்று உணரலாம்.
மருத்துவம். அறுவை முறையே சிறந்தது. கட்டியை மட்டும் வெட்டிக் களையலாம். உடல் வெப்பத்தை 30°C குறைத்து மூளைக்கு மாற்றுக் குருதி ஓட்ட வழி செய்ய வேண்டும். கட்டியுடன்தலைத் தமனியை வெட்டி எடுத்து விட்டுச் செயற்கைக் குழாய்களை வெட்டுண்ட தமனியில் பொருத்தி, மூளைக்குக் குருதி ஓட்டத் தடை ஏற்படா வண்ணம் செய்ய வேண்டும். —மா. ஜெ. ஃபிரடரிக் ஜோசப்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 261)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4fas4xau/
தமிழ்“சிரசுச் சிற்றுடல் கழலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4fas4xau/APA
Oliyon Research. (2026). சிரசுச் சிற்றுடல் கழலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4fas4xau/MLA
"சிரசுச் சிற்றுடல் கழலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4fas4xau/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment