அங்காளம்மை
aṅkāḷammai
சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும்.
சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும். அங்காளி, அங்காளதேவி என்னும் பெயர்களும் இத்தெய்வத்திற்கு உண்டு. இத்தெய்வத்தின் வடிவமைப்பினைப் பற்றி, ‘தியான சுலோகம்’ என்ற சிற்ப நூலில், ‘சிவந்த திருமேனி, சுடரிதழ் மகுடம், நான்கு திருக்கரங்கள் சூலாயுதம் ஏந்திய நிலை, கோரவடிவம்’ என்பன கூறப்பட்டுள்ளன.
கண்ணகியே காளி வடிவெடுத்துப் பழி தீர்த்துக் கொண்டாள் என்னும் தெருக்கூத்தின் நிகழ்ச்சி வழக்காக, அங்காளம்மை கண்ணகியின் கோர வடிவென்றும் கூறுவர்.
பொற்கொல்லரும் அம்மரபினைச் சார்ந்த கம்மாளரும் குலதெய்வமாகக் கொண்டு இத்தெய்வத்தினை வழிபட்டு வருகின்றனர்.
தஞ்சைத் தெற்குவீதி, குடந்தைக் கம்பட்ட விசுவநாதன் தெற்கு வீதி, கீழ்வேளூர் தெற்குத் தெரு ஆகிய இடங்களில் உள்ள இவ்வம்மையின் திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடையனவாகும்.சி.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 147)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4e4hkhp3/
தமிழ்“அங்காளம்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4e4hkhp3/APA
Oliyon Research. (2026). அங்காளம்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4e4hkhp3/MLA
"அங்காளம்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4e4hkhp3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment