{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4e4hkhp3/", "data": {"id": "4e4hkhp3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4e4hkhp3/", "kind": "article", "headword": "அங்காளம்மை", "romanization": "aṅkāḷammai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.589852+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும்.", "body_ta": "சக்தி வழிபாட்டிற்கமைந்த தெய்வங்களுள் ஒன்றாகும். அங்காளி, அங்காளதேவி என்னும் பெயர்களும் இத்தெய்வத்திற்கு உண்டு. இத்தெய்வத்தின் வடிவமைப்பினைப் பற்றி, ‘தியான சுலோகம்’ என்ற சிற்ப நூலில், ‘சிவந்த திருமேனி, சுடரிதழ் மகுடம், நான்கு திருக்கரங்கள் சூலாயுதம் ஏந்திய நிலை, கோரவடிவம்’ என்பன கூறப்பட்டுள்ளன.\n\nகண்ணகியே காளி வடிவெடுத்துப் பழி தீர்த்துக் கொண்டாள் என்னும் தெருக்கூத்தின் நிகழ்ச்சி வழக்காக, அங்காளம்மை கண்ணகியின் கோர வடிவென்றும் கூறுவர்.\n\nபொற்கொல்லரும் அம்மரபினைச் சார்ந்த கம்மாளரும் குலதெய்வமாகக் கொண்டு இத்தெய்வத்தினை வழிபட்டு வருகின்றனர்.\n\nதஞ்சைத் தெற்குவீதி, குடந்தைக் கம்பட்ட விசுவநாதன் தெற்கு வீதி, கீழ்வேளூர் தெற்குத் தெரு ஆகிய இடங்களில் உள்ள இவ்வம்மையின் திருக்கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடையனவாகும்.சி.கோ."}}