சாரா அணிக்கோவை
cārā aṇikkōvai
அணிக்கோவை விரிவுபடுத்தப்படும்போது K(λ) = |a-bλ|=0 என்னும் சமன்பாடு, λஇன் பல்லுறுப்புக் கோவையாக அமையுமானால், அது ஒரு சாரா அணிக்கோவை (secular determinant) ஆகும்.
அணிக்கோவை விரிவுபடுத்தப்படும்போது K(λ) = |a-bλ|=0 என்னும் சமன்பாடு, λஇன் பல்லுறுப்புக் கோவையாக அமையுமானால், அது ஒரு சாரா அணிக்கோவை (secular determinant) ஆகும். இது, அணி இயற்பியலின் (matrix algebra), Eஐ அலகு அணியாகக் கொண்ட (λE-A) என்னும் தனிப் பண்புடைய அணி Aஇன் அணிக்கோவை என்றும் குறிப்பிடப்படும். இங்கு
என்பது தனிப் பண்புடைய சமன்பாடு அல்லது சார்பாகும். கெழுக்கள் a,a,……aஇன் உறுப்புகளைக் கொண்டவையாகும். K(λ) இன் உள்ளார்ந்த (latent) அல்லது தனிப் பண்புடைய n மூலங்கள் ஐகன் மதிப்புகளையுடையவை. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூலங்கள் சமமாக இருந்தால், அவை சீர் கேடுடையவை (degenerate) எனப்படும். ஒத்த உருமாற்றத்தால், இரண்டு அணிகள் Aஉம், Bஉம், B =QAQ எனத் தொடர்பு படுத்தப்பட்டால் A.B இல் உள்ளார்ந்த மூலங்கள் ஒத்தவையாக உள்ளன என்பது, உள்ளார்ந்த மூலங்களின் சிறந்த பண்பாகும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 127)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4bkmy57e/
தமிழ்“சாரா அணிக்கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4bkmy57e/APA
Oliyon Research. (2026). சாரா அணிக்கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4bkmy57e/MLA
"சாரா அணிக்கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4bkmy57e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment