அணிக்கோவை விரிவுபடுத்தப்படும்போது K(λ) = |a-bλ|=0 என்னும் சமன்பாடு, λஇன் பல்லுறுப்புக் கோவையாக அமையுமானால், அது ஒரு சாரா அணிக்கோவை (secular determinant) ஆகும். இது, அணி இயற்பியலின் (matrix algebra), Eஐ அலகு அணியாகக் கொண்ட (λE-A) என்னும் தனிப் பண்புடைய அணி Aஇன் அணிக்கோவை என்றும் குறிப்பிடப்படும். இங்கு என்பது தனிப் பண்புடைய சமன்பாடு அல்லது சார்பாகும். கெழுக்கள் a,a,……aஇன் உறுப்புகளைக் கொண்டவையாகும். K(λ) இன் உள்ளார்ந்த (latent) அல்லது தனிப் பண்புடைய n மூலங்கள் ஐகன் மதிப்புகளையுடையவை. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மூலங்கள் சமமாக இருந்தால், அவை சீர் கேடுடையவை (degenerate) எனப்படும். ஒத்த உருமாற்றத்தால், இரண்டு அணிகள் Aஉம், Bஉம், B =QAQ எனத் தொடர்பு படுத்தப்பட்டால் A.B இல் உள்ளார்ந்த மூலங்கள் ஒத்தவையாக உள்ளன என்பது, உள்ளார்ந்த மூலங்களின் சிறந்த பண்பாகும். —பங்கஜம் கணேசன்