செயலிப் பண்புகள்
ceyalip paṇpukaḷ
வகையிடல் செய்கை என்னும் குறியீடு மூலம் குறிப்பிடப்படுகிறது.
வகையிடல் செய்கை என்னும் குறியீடு மூலம் குறிப்பிடப்படுகிறது. என்பதற்குப் பிரதியாக ஒரே எழுத்து Dஐப் பயன்படுத்துவது செயல் முறையில் உள்ளது. D வகையீட்டுச் செயலி (differential operator) எனப்படும். அதாவது,
D = ; Dy = ஆகும். இங்கு Dy என்பதை ஒரு பெருக்கலாகவோ, y இன் கெழுவாகவோ கருதக் கூடாது. D என்னும் வகையீட்டுச் செயலி y என்னும் சார்பின் மேல் இயங்குகிறது எனக் கொள்ள வேண்டும். மேலும் என்பது ஒரு x ஐப் பொருத்த சார்பாகும். இவ்வாறே, D²y = ; D³y = , …… பொதுவாக Dny = ஆகும். D முதல் வகைக் கெழுச் செயலி என்றும், D² இரண்டாம் வகைக் கெழுச் செயலி என்றும், … Dn என்பது n முறை வகைக்கெழுச் செயலி என்றும் கருத வேண்டும்.
(D-x)y இன் D ஒரு செயலி, α ஓர் இயற்கணித மாறி எனக் கொண்டால், (D-α)y = Dy-αy என்பதில், αy என்பது α, y இரண்டின் பெருக்கம் என்றும், Dy என்பது {[sfrac|dy|dx என்றும் கொள்ள வேண்டும். (D - α) (D - β)y எனில், முதலில், y மேல் (D - β) செயல்பட்டுப் பெறப்படும் சார்பின் மீது D - α செயல்படும். α, β மாறிகளாவன: (D - α) (D - β)y = (D - α) ((D - β)}y
= (D - α)(Dy - βy)
= D(Dy - βy) - α(Dy - βy)
= D²y - (α + β)Dy + αβy
இவற்றிலிருந்து D(αy) = α (Dy)
D (βy) = β(Dy) என்றும்
(α+β) Dy = α (Dy) + β (Dy) என்றும் அறியலாம்.
தலைகீழ்ச் செயலிகள். Dy = u எனக் கொண்டால், = u, ∴y = ∫u dx
y = u = D-1 u என்பதிலிருந்து D-1 u = ∫u dx எனக் கிடைக்கிறது ஒரு சார்பின் வகைக்கெழு காண்பதும், பின்னர், அவ்வகைக் கெழுவின் தொகை காண்பதும் முறையே செயலும், தலைகீழ்ச் செயலுமாகும். மாற்று முறையும் பொருத்தமாகும்.
எடுத்துக்காட்டாக, D[ ∫f(x) dx] = ∫[Df(x)] = f(x) என ஆகும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 791)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4bbxyrte/
தமிழ்“செயலிப் பண்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4bbxyrte/APA
Oliyon Research. (2026). செயலிப் பண்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4bbxyrte/MLA
"செயலிப் பண்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4bbxyrte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment