எனப்படுவோர் ஆரியரல்லாத ஒருவகை மக்கள் கூட்டம். துருவாசர், யது, துக்ரிக்யசு, புரூசு போன்ற இனத்தவர்களுடன் அனசு என்ற இன மக்களும் வேத நூல்களில் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளனர். அவர்கள் பருசுனி (ராவி) ஆற்றங்கரையில் வாழ்ந்தவர்கள். ஆணவம் என்னும் சொல் அக்கினியைக் குறிப்பதாகும். அணு இளவரசர் ஒருவரையும் சுட்டுவதால் அணு — ஆணவம் என்று குறிக்கப்பட்டது.