என்பார் தலைசிறந்த தேசபக்தர்; சமூகத்தொண்டர்; அரசியல் வல்லுநர். இவர் கி.பி. 1887–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்திய ஊழியர் சங்கத்தின் (Servants of India Society) ஆயுள் உறுப்பினராக இருந்தார். மாநிலப் புனரமைப்புக் குழுவின் உறுப்பினராக இவர் 1956-ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். பல்வேறு கல்வி, சமூக அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றிய இவர், பல்லாண்டுகள் இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்து அருந்தொண்டாற்றினார். அரசியல் கருத்துக்களில் தமக்கென்று தனித்தன்மை கொண்டவர். இவர் 1959 ஆம் ஆண்டில் காலமானார்.