உபயது, தால் அல்
upayatu, tāl al
பண்டைய மெசபடோமியாவிலிருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பண்பாட்டைக் கொண்ட இடம்.
பண்டைய மெசபடோமியாவிலிருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பண்பாட்டைக் கொண்ட இடம். உபயது, தால் அல் (Ubayd, Tall al) புகழ்மிக்க ஊர் (Ur) என்னும் நகருக்கு அருகே இன்றைய ஈராக்கின் தை கூவார் (Dhi Qar) பகுதியில் உள்ளது. இவ்விடத்தில் அகழாய்வுகள் செய்து தொன்மை மிக்க நாகரிகத்தை அறிஞர்கள் கண்டறிந்தனர். இவ்வூர் தெல் எல் உபயது (Tell El Ubayd) என்றும் கூறப்படுகிறது. இங்குக் கிடைத்த தொன்மைப் பொருள்களுள் வண்ணம் தீட்டப்பட்டும் வடிவவியல் உருவங்களால் (Geometric Design) அழகு செய்யப்பட்டும் கிடைத்த மட்கலன்கள் குறிப்பிடத்தக்கனவாகும். இம்மட்கலன்கள் கைப்பிடிகளுடனும் மூக்கு அமைப்புடைய ஊற்றும் வாய்களுடனும் காணப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புள்ள மட்கலம் முதன்முதலில் இப்பகுதியில் தான் கிடைக்கிறது. சில மட்கலன்களின் வெளிப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் விலங்கின் உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. உபயது என்னும் ஊரில் தெற்குப் பகுதியிலும் வடக்குப் பகுதியிலும் நாகரிகம் சிறிது காலங்கடந்து பரவியது. தெற்குப் பகுதியில் கி.மு. 5200 முதல் 3500 வரை சிறந்த நாகரிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 922)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/494m2yek/
தமிழ்“உபயது, தால் அல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/494m2yek/APA
Oliyon Research. (2026). உபயது, தால் அல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/494m2yek/MLA
"உபயது, தால் அல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/494m2yek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment