பனி
paṉi
மார்கழி, தை மாதங்கள் குளிர் காலமாக அமைந்துள்ளன.
மார்கழி, தை மாதங்கள் குளிர் காலமாக அமைந்துள்ளன. அப்போது பகலைவிட இரவு நேரம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் திறந்தவெளியில் போடப்பட்ட துணி, நீரில் நனைந்ததுபோல் ஈரமாகி விடுகிறது. செடி கொடிகளின் மேல் நீர்த் திவலைகள் படிகின்றன. சில செடிகளின் கீழே தரையில் சொட்டு சொட்டாக நீர் சொட்டியிருப்பதையும் காணலாம். இந்நீரையே பனிநீர் என்கிறோம். இக் காலத்தை 'பனிக்காலம்’ என அழைக்கிறோம்.
'பனி நீர்' எவ்வாறு உருவாகிறது? சாதாரணமாக நாள் முழுவதும் வெயிலில் இருக்கும் செடி, கொடி மரம் போன்ற தாவரங்கள் வெப்பமடைகின்றன. இரவில் இவை வெப்பத்தை வெளியிட்டுக் குளிர்ச்சியடைகின்றன. காற்றில் நீர்த் தன்மை இருப்பது இயல்பு. அதிலும் வெப்பமுற்ற காற்று அதிக அளவில் நீரை ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதிக நீரை ஈர்த்துக் கொண்ட காற்று இரவில் தாவரங்களின் மீது தவழ்ந்து செல்லும்போது தான் ஈர்த்துள்ள நீரை குளிர்ச்சியான தாவரங்களின் மீது நீர்த் திவலைகளாகப் படியச் செய்கிறது. இதுவே பணி நீர்.
காற்றின் வெப்பநிலை320 பாரன்ஹீட்டுக்குக் குறையுமானால் அஃது குளிர் காற்றாக மாறி விடும். வெப்பம் குறைவான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பகலைவிட இரவு குளிராக இருப்பதற்குக் காரணம் காற்றின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துவிடுவதேயாகும். 320-க்கும் குறைவானால் பணித் துளிகள் வெண்பனியாக மாறிவிடும். இதுவே 00 செல்லுமானால் பனிக் கட்டியாக உருமாறி விடும். சிலசமயம் மழைக் காலத்தில் பனிக்கட்டிகள் விண்ணிலிருந்து மழையோடு கலந்து விழுவதுண்டு. இவை ‘ஆலங்கட்டிகள்’ என அழைக்கப்படும். இவற்றின் மீது வெப்பமோ, வெப்பக் காற்றோ பட்டால் பனிக்கட்டி உருகி நீர் நிலையை அடைந்துவிடும். நீரைச் செயற்கை முறையில் பனிக்கட்டிகளாகச் செய்வர். இதற்கு அடர்த்தி குறைவு; அளவு பெரிதாக இருக்கும். இதனால் நீரில் போடப்படும் பனிக் கட்டி மிதக்கும்.
சில சமயம் குளிர் மிகுந்த நாடுகளில் உள்ள ஏரி, குளங்கள் 00-க்குக் கீழே வெப்பம் குறையும் போது நீரின் மேற்பகுதி பனிக்கட்டியாக மாறி விடும். ஆனால், அதன் அடியில் நீர் அப்படியே இருக்கும். நீரின் வெப்ப நிலையை மேலுள்ள பனிக்கட்டிப்படலம் பாதுகாக்கிறது. இந்நீரில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புடன் உயிர் வாழும்.
தூய்மையான நீருக்கு நிறமில்லை என்பது நாம் அறிந்ததே. தூயநீர் பனிக்கட்டியாகும் போது அதற்குத் தனி நிறம் ஏதும் இருப்பதில்லை. தூய்மையற்ற நீர் பனிக்கட்டியாக மறினால் பல வண்ணங்களுடையதாகத் தோன்றும்.
பனிக்கட்டியில் கிருமிகள் ஏதும் உருவாவதில்லை. இதனால், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் போன்றவைகள் கெடாமல் இருக்க பனிக்கட்டியோடு வைப்பதுண்டு. குளிர் சுவை நீரில் பனிக்கட்டித் தூளைப் போட்டுப் பருகுவதும் உண்டு. ரெஃப்ரிஜி ரேட்டர் எனும் குளிர்பதனப்பெட்டி இதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 213)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44rnszx2/
தமிழ்“பனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/44rnszx2/APA
Oliyon Research. (2026). பனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44rnszx2/MLA
"பனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/44rnszx2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment