செசபிக் விரிகுடா
cecapik virikuṭā
இது வெர்ஜினியாவிற்கு வடக்கேயுள்ள வட அட்லாண்டிக் பெருங்கடலின் நீண்ட, குறுகிய நீர்ப் பகுதியாக உள்ளது.
இது வெர்ஜினியாவிற்கு வடக்கேயுள்ள வட அட்லாண்டிக் பெருங்கடலின் நீண்ட, குறுகிய நீர்ப் பகுதியாக உள்ளது. இது மேரிலாண்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. 320 கி.மீ. நீளமும் 6–64 கி.மீ. அகலமுங் கொண்ட இதற்குப் பெரிய உப்பு நீர்க் கடல் என்றும் பெயருண்டு.
இதன் முனையில் உள்ள கால்வாய் 19 கி.மீ. அகலமுடையது. கப்பல்கள் விரிகுடாவின் முழுப் பரப்பிலும் செல்ல முடியும். விரிகுடாவின் கரையில் பல நதிகளின் கழிமுகங்கள் உள்ளன. இதில் ஜேம்ஸ், யார்க், ராப்பண்ணாக், போட்டோமாக், சுஸ்குவி ஹன்னா ஆகிய நதிகள் கலக்கின்றன. பால்ட்டிமோர், நார்ஃபோக், போர்ட்ஸ்மவுத்- ஆகிய சிறு துறைமுகங்கள் உள்ளன. மேற்குக் கரையில் அன்னாபோலிஸ் என்னுமிடத்தில் அமெரிக்கக் கடற்படைக் கழகம் உள்ளது. —கே. கே.அருணாசலம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 726)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42v7c2vm/
தமிழ்“செசபிக் விரிகுடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/42v7c2vm/APA
Oliyon Research. (2026). செசபிக் விரிகுடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42v7c2vm/MLA
"செசபிக் விரிகுடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/42v7c2vm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment