உடிகா
uṭikā
துனீசியாவில் மசார்தா (Majardah) ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தொன்மை மிக்க நகரம்.
துனீசியாவில் மசார்தா (Majardah) ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தொன்மை மிக்க நகரம். பியூனிசியர்கள் கி.மு. 8–ஆம் நூற்றாண்டில் உடிகா (Utica) வில் குடியேறி வாழ்ந்தனர். ஆப்பிரிக்காவில் பியூனிசியர்களின் கார்த்தேசு (Carthage) நகருக்கு அடுத்தபடியாக இந்நகரம் விளங்கியது. உரோமானியர்கள் கார்த்தேசு நகரத்தின்மீது போரிட்டுத் தாக்கியபொழுது உடிகா உரோமானியர்களுக்கு உதவியது. இதன் மூலம் கார்த்தேசு நகரம் அழிக்கப்பட்டதுடன் உடிகாவின் நிலையும் உயர்ந்தது. உரோமாபுரியின் அரசியல் நடவடிக்கைகள். உடிகாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. ஆக்டே- வியன் (அகசுடசு சீசர்) காலத்தில் உடிகா ஒரு பகுதி உரோமானியக் குடிஉரிமை பெற்ற நகரமாக விளங்கியது; ஆட்ரியன் என்னும் அரசர் காலத்தில் முழு உரிமை பெற்ற நகரமாக மாறியது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் பியூனிசியர்களின் புதைகுழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டதுடன் உரோமானியக் குடியேற்றப் பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 816)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zsqkg6z/
தமிழ்“உடிகா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3zsqkg6z/APA
Oliyon Research. (2026). உடிகா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3zsqkg6z/MLA
"உடிகா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3zsqkg6z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment