பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனாகத் திகழும் இளஞ்சேரலிரும் பொறைக்குத் தாயும், குட்டுவன் இரும் பொறைக்கு மனைவியுமாவாள், மக்கள் தாய முறைப்படி இவள் வேளிர் மரபினனான மையூர் கிழானுக்கு மகள் முறையினளாவாள். பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம், “மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை” என்று இவளைக் குறிப்பிடுகிறது.