சுழல் காந்த விகிதம்
cuḻal kānta vikitam
அணு அமைப்புகளில் கோண உந்தத்திற்கும், காந்தத் திருப்புத் திறனுக்கும் இடையில் உள்ள விகிதம் சுழல் காந்த விகிதம் (gyromagnetic ratio) எனப்படும்.
அணு அமைப்புகளில் கோண உந்தத்திற்கும், காந்தத் திருப்புத் திறனுக்கும் இடையில் உள்ள விகிதம் சுழல் காந்த விகிதம் (gyromagnetic ratio) எனப்படும். வழக்கமாக, இந்தத் தகவு காந்த விசையியல் காரணி g’ இன் அடிப்படையில் பின் வருமாறு குறிப்பிடப் படும். = இங்கு தகவு, மின் காந்த அலகுகளில் எழுதப் பட்டுள்ளது. e என்பது எலெக்ட்ரானின் மின்னூட்டம், m என்பது அதன் நிறை. சில சமயங்களில் g’ பொதுவாகச் சுழல் காந்தத் தகவு எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
சுழல் காந்தத் தகவின் தலை கீழ் மதிப்பு காந்த எந்திரவியல் தகவு எனப்படும். இதை υ என்ற எழுத்தால் குறிப்பிடுவர் υ=g’e/2me. ஒரு பொருளின் காந்த விசையியல் தகவு, காந்தத் திருப்புத் திறன் தோற்றுவாயை இனம் காணுகிறது. எடுத்துக்காட்டாக எலெக்ட்ரான் தற்சுழற்சிக்கான கோண உந்தம் . இங்கு h என்பது பிளாங்கின் மாறிலியை 2π ஆல் வகுத்தால், கிடைக்கும் அளவு. காந்தத் திறப்புத் திறன் போர் மாக்னட்டானான க்குச் சமம். எனவே, காந்த விசையியல் தகவு
ஆனால், υ = eg’/2mc. எனவே எலெக்ட்ரான் தற்சுழற்சிக்கு g’ = 2. ஓடு பாதைக் கோண உந்தத்திற்கு υ = , g’ = 1. பெரும்பாலான அயக் காந்தப் பொருள்களுக்கு, ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட g’ மதிப்பு ஏறக் குறைய, இரண்டுக்குச் சமமாக உள்ளது. இதிலிருந்து, எலெக்ட்ரான் தற்சுழற்சியே காந்தமாக்கலில் பெரும் பங்களிப்புச் செய்கிறது என்று தெரிகிறது. g’ மதிப்புக்கும், இரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடு ஓடு பாதை இயக்கம் காந்தமாக்கலுக்கு எந்த அளவில் பங்களிப்புச் செய்கிறது என்பதைக் காட்டும். மிகு மின் கடத்திகளில் g’=1 ஆக இருப்பதிலிருந்து, மெய்ஸ்னர் விளைவை உண்டாக்குகிற டயா காந்த மின்னோட்டங்கள் எலெக்ட்ரான்களால் தோற்றுவிக்கப் படுகின்றன என்று தெரிகிறது.
நிற மாலையியல் பிளவுக் காரணி (splitting factor). ஒரு காந்தப் புலத்தில் உள்ள ஓர் அணு அமைப்பின் ஆற்றல் மட்டங்களில் ஏற்படும் பிளவுகளின் அளவை, இந்தக் காரணி அளிக்கிறது. H என்ற காந்தப் புலத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஒரு தன்னிச்சையான எலெக்ட்ரானுக்கு ΔE = gμH என ஆற்றல் மட்டங்கள் பிளவு படுகின்றன. இங்கு μ என்பது போர் மாக்னட்டான், g என்பது நிற மாலையியல் பிளவு காரணி; அதை g காரணி எனவும் குறிப்பதுண்டு. அது 2 என்ற மதிப்புக் கொண்டது. பாரா காந்த உப்புகளில் உள்ள எலெக்ட்ரான் தற்சுழற்சிகளுக்கு ஆற்றல் மட்டத் திட்டங்கள் சிக்கலானவை. இதற்குத் தற்சுழற்சி ஓடு பாதை இயக்கப் பிணைப்புகளும், படிகவியல் புல இடை வினைகளும் காரணமாகும். வெவ்வேறு நிகழ்வுகளுக்கு g காரணியின் மதிப்பு வெவ்வேறாக இருக்கிறது. அது படிக அச்சுகளைப் பொறுத்துக் காந்தப் புலம் திசைப் பட்டுள்ளமையைச் சார்ந்திருக்கக் கூடும். இத்தகைய சூழ்நிலைகளில், காரணி குவாண்டம் எந்திரவியல் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. அயக் காந்தப் பொருள்களுக்கு நிற மாலையியல் பிளவு காரணியும் குவாண்டம் எந்திரவியல் அடிப்படையிலேயே வரையறுக்கப் படும்., அது காந்தப் புலத்தால் ஆற்றல் மட்டங்கள் பிளவு படும் அளவைக் கொடுக்கிற அயக் காந்த ஒத்ததிர்வு நிபந்தனையிலுள்ள காரணியாகும். அது பொதுவாகக் காந்த விசையியல் காரணிக்குச் சமமாக இருப்பதில்லை. ஏனெனில், ஓடு பாதைக் கோண உந்தத்தின் விளைவுகள், அவற்றை வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன. தன்னிச்சையான அணுக்களுக்கு நிற மாலைப் பிளவுக் காரணி லான்டேயின் g காரணிக்குச் சமமாயிருக்கும். —கே. என்.ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 546)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qfd4g3h/
தமிழ்“சுழல் காந்த விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3qfd4g3h/APA
Oliyon Research. (2026). சுழல் காந்த விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qfd4g3h/MLA
"சுழல் காந்த விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3qfd4g3h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment