இராமசாமிப்பிள்ளை
irāmacāmippiḷḷai
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு ஞானசம்பந்தப்பிள்ளை என்ற வேறு பெயரும் உண்டு. இவர் திருவாவடுதுறை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்; ஆறுமுக நாவலரின் நண்பர். இவர் இலக்கிய இலக்கணங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்றார். பாண்டித் துரைத் தேவருக்குத் தமிழாசிரியராக விளங்கினார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘ஆற்றூர்ப் புராணம்’ ‘திருவாழ்கொளிப்புத்தூர்ப் புராணம்’, ‘விளத்தொட்டிப் புராணம்’ ஆகிய நூல்களை எழுதுங்கால் உடனிருந்து உதவி புரிந்துள்ளார். ஆறுமுக நாவலர் தம் நூல்களைப் பதிப்பிப்பதற்குப் பொருள் வசதி இல்லாமல் இருந்தார். அத்தருணத்தில் இராமநாதபுரம் பொன்னுசாமி தேவரிடம் நிலைமையை எடுத்துக்கூறி நாவலருக்குப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிப் பெற்றுத் தந்தார்.
இவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ‘கம்பர் அந்தாதி’, ‘முல்லை அந்தாதி’ முதலிய நூல்களை அவர்தம் உரையுடன் பதிப்பித்துள்ளார். மேலுமிவர் பரஞ்சோதியின் திருவிளையாடற்புராண முதற்காண்டத்துக்கு உரை எழுதியுள்ளார். இந்நூல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய பாயிரத்தைக் கொண்டதாகும். மூவர் தேவாரங்களைத் தல முறைப் பதிப்பாக இவர் வெளியிட்டுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 115)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3phgcsmt/
தமிழ்“இராமசாமிப்பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3phgcsmt/APA
Oliyon Research. (2026). இராமசாமிப்பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3phgcsmt/MLA
"இராமசாமிப்பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3phgcsmt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment