திரிபு

tiripu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றம், வேறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபு)
2.
தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சி விகாரம். (தொல். எழுத். 109, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபு)
3.
முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபு)
4.
முதலெழுத்தொழியஇரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபு)
5.
(இயற்பியல்)-உருக்குலைவிக்கும் விசை செயற்படுவதால், பொருளின் நீளம், பருமன் அல்லது வடிவம் மாறுபடுகிறது. அதாவது அப்பொருள் திரிபு நிலையில் உள்ளது எனப்படும். ஒரு பொருளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்திற்கும் அதன் தொடக்க நிலைப் பரிமாணத்திற்கும் இடையேயான தகவு திரிபு எனப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபு)
6.
விபரீதம், விகாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 219)
7.
விலக்கம். ஒளிமறிப்பு அல்லது விலகலால் கதிர் திரும்புதல். கதிரானது திசை மாறுங்கோணம், திரியுங்கோணம் எனப்படும். திரிபடையாக் கதிரின் திரிபுக்கோணம் 0° — deviation
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)
8.
வில் சுருளில் தகைவினால் ஏற்படுவது. 2. சேர்வகை: கலப்பினமாக்கலால் புதிய வகையை உண்டாக்கல். 3. தோரிணி. (ப.து) — strain - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 418)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3fx4vsqg/

தமிழ்
“திரிபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fx4vsqg/
APA
Oliyon Research. (2026). திரிபு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3fx4vsqg/
MLA
"திரிபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3fx4vsqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment