உயர்வு நோக்கம்
uyarvu nōkkam
ஒரு மொழி (Language) அல்லது கிளைமொழி (Dialect) அவ்வது தலியாள் பேச்சுமொழியின் (Idiolect) கூறுகளைப் பிறிதோர் மொழியோ கிளைமொழியோ தனியாள் பேச்சு மொழியோ கடன்வாங்குதல் மொழி கடன்வாங்கல் எனப்படும்.
ஒரு மொழி (Language) அல்லது கிளைமொழி (Dialect) அவ்வது தலியாள் பேச்சுமொழியின் (Idiolect) கூறுகளைப் பிறிதோர் மொழியோ கிளைமொழியோ தனியாள் பேச்சு மொழியோ கடன்வாங்குதல் மொழி கடன்வாங்கல் எனப்படும். தேவை கருதியும் (Need Filling Motive), உயர்வு நோக்கம் (Prestige Motive) காரணமாகவும் இத்தகைய கடன்வாங்கல் நிகழலாம். இவற்றுள் உயர்வுநோக்கம் கருதி நடைபெறும் கடன்வாங்கள் ஒரு மொழியின்கண் மிகுதியாக நிகழ்கின்றது.
மொழி முதன்மை, கடன் கொடுக்கும் மொழியினைப் பேசுபவர் மீது கொண்ட உயர்விருப்பு, நாட்டை ஆளும் அயலாரின் ஆளுமை போன்றவை உயர்வு நோக்கத்திற்கு அடிப்படைகளாக அமையப் பெறும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் ஆங்கிலமொழிச் சொற்களைத் தேவையின்றிக் கடன் வாங்கித் தாம் பேசும் தமிழில் பயன்படுத்துவது உயர்வுநோக்கத்தின் பாற்பட்டதாகும். ‘அப்பா வந்து விட்டார்’ என்ற வாக்கியத்தில் ‘அப்பா’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக ஆங்கிலச் சொல்லைத் தேவையின்றிப் பயன்படுத்தும் நிலையில் இது உயர்வு நோக்கமாகக் கருதப்படும். ஆங்கிலமொழிப் புலமையுடையோர் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்படுவதால் உயர்வு நோக்கம் கருதி ஈண்டு ஆங்கில மொழிச் சொற்களைக் கடன்வாங்குதல் காணலாம்.
கிளைமொழிக் கூறுகளைக் கடன்வாங்குவதில் உயர்வு நோக்கம் பெரும்பங்கு வகிக்கின்றது. உயர்ந்த சாதியினர்கள் அல்லது உயர்பதவி வகிப்பவர்கள் பேகம் இளைமொழிகளின் கூறுகள் பிற கிளைமொழிகளைப் பேசும் மக்களால் உயர்வு நோக்கம் காரணமாகக் கடன் வாங்கப் பெறுதலை அனைத்து மொழிகளிலும் காணமுடியும்.
உயர்வு நோக்கம் கருதி ஒரு மொழியின் கூறுகளைப் பிறிதோர் மொழி கடன்வாங்குதல் பெரும்பாலும் இரண்டு மொழிகளையும் பேசுகின்றவர்கள் சேர்ந்து வாழும் நிலையில் நிகழப் பெறுகின்றது. சமயத்தைப் பரப்புவதற்குத் தென்னிந்தியா வந்த வடமொழியினர் தென்னிந்தியர்களோடு வாழ்ந்தமையால் வடமொழிக் கூறுகள் பலவற்றைத் தென்னிந்திய மொழிகள் கடன்வாங்கின.
ஒருவரின் ஒலிப்பு முறைமையை உயர்வு நோக்கம் கருதிக் கடன் வாங்குதலும் உண்டு. உயர்பதவியிலிருப்பவர்கள் மீது கொண்டுள்ள உயர்விருப்புக் காரணமாக அவர்கள் பேச்சின் ஒலிப்பு முறைமையைப் பிறர் கடன்வாங்குதலும் உண்டு, சான்றாகத் தமிழ் நாட்டின் சில அரசியல் கட்சித் தலைவர்களின் ஒலிப்பு முறைமையைத் தொண்டர்கள் பின்பற்றுதலைக் கூறலாம். ஏ.ஆ.
துணை நூல்
Hockett, C.F., A course in Modern Linguistics, IBH Publishing Co., New Delhi, 1958.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 969)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39qkwahk/
தமிழ்“உயர்வு நோக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/39qkwahk/APA
Oliyon Research. (2026). உயர்வு நோக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39qkwahk/MLA
"உயர்வு நோக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/39qkwahk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment