அதீசர்
atīcar
அதீசர் என்பவர் புத்தசமயத் துறவியும் கொள்கைப் பரப்புநருமாவார்.
அதீசர் என்பவர் புத்தசமயத் துறவியும் கொள்கைப் பரப்புநருமாவார். இவர் இயற்பெயர் சந்திரகர்ப்பர் என்பதாகும். கி.பி. 981–ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தில் சகோர் என்னும் ஊரில் இவர் பிறந்தவராகக் கருதப்பெறுகிறார். தம் 31–ஆம் வயதில் இவர் புத்தசமயத்தை மேற்கொண்டார். காலப்போக்கில் இவர் புத்த சமயத்தில் வல்லுநரானார், திபேத்து நாட்டு அரசரின் அழைப்பினை ஏற்று இவர் திபேத்து நாட்டிற்குப் போந்தார். அங்குப் பன்னீராண்டுகள் தங்கி, வடமொழியிலும் திபேத்திய மொழியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பௌத்த சமயத்தை வளர்த்தார். கி.பி. 1054–ஆம் ஆண்டில் தம் 73–ஆம் வயதில் திபேத்திலேயே காலமானார். திபேத்தியர்கள் இவரைப் போதி சத்துவர் என வழிபடுகிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 366)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3942nbmy/
தமிழ்“அதீசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3942nbmy/APA
Oliyon Research. (2026). அதீசர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3942nbmy/MLA
"அதீசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3942nbmy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment