இதன் தாவரவியல் பெயர் கிளிரோடெண்ட்ரன் செர்ரேட்டம் (Clerodendron serratum) என்பதாகும். இதற்கு ஆங்கார வள்ளி, காட்டு எருக்கு என்ற பெயர்களும் உண்டு. இதன் இலைகளும், பூங்கொத்துகளும் தேக்கு மரத்தின் இலை, பூங்கொத்துகளைப் போன்று காணப்பட்டாலும், தேக்கு மரத்தை விடத் தோற்றத்தில் சிறியதாக உள்ளமையால், இது சிறு தேக்கு எனப்படுகிறது. மேலும், இது தேக்கு மரத்தை உள்ளடக்கிய வெர்பினேசி என்னும் குடும்பத்திற்குரியது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இது 3 மீ. உயரம் வளரக் கூடிய புதர்ச் செடியாகும். தண்டு நான்கு கோணங்களை உடையது. இலைகள் 10—15 செ.மீ. நீளமுடையவை. இலை விளிம்பு கூரிய பற்கள் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். மலர்கள் கவர்ச்சியாக, நீல வண்ணத்தில், இரு பக்கக் கிளைத்தலைக் கொண்ட (cyme) மஞ்சரியில் இருக்கும். ஐந்து புல்லிகளையும், ஐந்து அல்லிகளையும், நான்கு மகரந்தங்களையும், நான்கு சூலறைகள் கொண்ட சூலகத்தையும் கொண்டிருக்கும். கனி சதைப் பற்றுடைய நான்கு மடிப்புகளைக் கொண்ட கொட்டைக் கனி (drupe) வகையைச் சார்ந்தது. இம்மரத்தின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவப் பண்பு கொண்டவை. வேர் இருமல், காய்ச்சல், சளி ஆகியவற்றைக் குணப்படுத்தும். இலைகளை எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்த களிம்பு, கண் நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகள் பாம்பு, தேள் சுடிக்குப் பயன்படுகின்றன. —கோ. அர்ச்சுணன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->