அல்-மான் சூர்
al-māṉ cūr
அல்-மான் சூர்(712-775) முகம்மது.
அல்-மான் சூர்(712-775) முகம்மது. நபியின் மாமனான அப்பாசின் குலத்தோன்றல்களான காலிபுகளில் இரண்டாவது மன்னன். இவனது ஆட்சிக் காலம் 754-775. இவன் முகம்மதிய அரசை நன்றாக நிலைபெற அமைத்தான். 762-ல் இவன் பக்தாது நகரை அமைக்கத் தொடங்கினான். இவன் பாரசீகர்களை ஆதரித்தான். பார்மிசைடுகள் இவனுடைய மந்திரிகளாயிருந்தனர்.
அல்-மான் சூர்(?-1002): ஸ்பெயினில் இடைக் காலத்தில் முகம்மதிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்களில் 11-ம் அல்-ஹகாம் என்னும் அரசனிடம் வேலை பார்த்து வந்தவன் அல்-மான் சூர். 11-ம் ஹீஷாம் என்னும் சிறுவன் அரசனாக இருந்தபோது இவன் இரண்டாந்தரப் படைத்தலைவனா யிருந்தான். அப்போது வட ஸ்பெயினிலிருந்த கிறிஸ்தவர்களை எதிர்த்து, இவன் படையெடுத்துச் சென்றான் ; திரும்பி வந்ததும் அரசனுடைய பிரதிநிதியை நீக்கிவிட்டுத் தானே அந்தப் பதவியை மேற்கொண்டான். சைனியத்தையும் இராச்சிய நிருவாகத்தையும் சரிவரத் திருத்தியமைத்தான். வட ஆப்பிரிக்காவிலிருந்த முகம்மதிய நாடுகளின் மீதிருந்த ஆதிக்கத்தை நீக்கிக்கொண்டான். புலவர்களையும் கலைஞர்களையும் போற்றி ஆதரித்தான். 991-ல் பிரதிநிதி பதவியைத் துறந்தான். இவன் ஸ்பெயினில் பதவி வகித்த முகம்மதிய ஆட்சியாளர்களில் சிறந்த ஒருவன்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 246)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/35xgj3rg/
தமிழ்“அல்-மான் சூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35xgj3rg/APA
Oliyon Research. (2026). அல்-மான் சூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/35xgj3rg/MLA
"அல்-மான் சூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/35xgj3rg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment