{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/35xgj3rg/", "data": {"id": "35xgj3rg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/35xgj3rg/", "kind": "article", "headword": "அல்-மான் சூர்", "romanization": "al-māṉ cūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.778878+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அல்-மான் சூர்(712-775) முகம்மது.", "body_ta": "அல்-மான் சூர்(712-775) முகம்மது. நபியின் மாமனான அப்பாசின் குலத்தோன்றல்களான காலிபுகளில் இரண்டாவது மன்னன். இவனது ஆட்சிக் காலம் 754-775. இவன் முகம்மதிய அரசை நன்றாக நிலைபெற அமைத்தான். 762-ல் இவன் பக்தாது நகரை அமைக்கத் தொடங்கினான். இவன் பாரசீகர்களை ஆதரித்தான். பார்மிசைடுகள் இவனுடைய மந்திரிகளாயிருந்தனர்.\n\nஅல்-மான் சூர்(?-1002): ஸ்பெயினில் இடைக் காலத்தில் முகம்மதிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்களில் 11-ம் அல்-ஹகாம் என்னும் அரசனிடம் வேலை பார்த்து வந்தவன் அல்-மான் சூர். 11-ம் ஹீஷாம் என்னும் சிறுவன் அரசனாக இருந்தபோது இவன் இரண்டாந்தரப் படைத்தலைவனா யிருந்தான். அப்போது வட ஸ்பெயினிலிருந்த கிறிஸ்தவர்களை எதிர்த்து, இவன் படையெடுத்துச் சென்றான் ; திரும்பி வந்ததும் அரசனுடைய பிரதிநிதியை நீக்கிவிட்டுத் தானே அந்தப் பதவியை மேற்கொண்டான். சைனியத்தையும் இராச்சிய நிருவாகத்தையும் சரிவரத் திருத்தியமைத்தான். வட ஆப்பிரிக்காவிலிருந்த முகம்மதிய நாடுகளின் மீதிருந்த ஆதிக்கத்தை நீக்கிக்கொண்டான். புலவர்களையும் கலைஞர்களையும் போற்றி ஆதரித்தான். 991-ல் பிரதிநிதி பதவியைத் துறந்தான். இவன் ஸ்பெயினில் பதவி வகித்த முகம்மதிய ஆட்சியாளர்களில் சிறந்த ஒருவன்."}}