சாய நூல் துணிகள்
cāya nūl tuṇikaḷ
இழையை நூலாக்கிய பின்பு (நூற்ற பின்) நெய்வதற்கு முன்னர், சாயமேற்றப்பட்ட நூல்களிலிருந்து தயாரிக்கப்படும் துணிகளில் உள்ள சாயம் நூலின் உட்பகுதி வரை ஊன்றியிருக்கும்.
இழையை நூலாக்கிய பின்பு (நூற்ற பின்) நெய்வதற்கு முன்னர், சாயமேற்றப்பட்ட நூல்களிலிருந்து தயாரிக்கப்படும் துணிகளில் உள்ள சாயம் நூலின் உட்பகுதி வரை ஊன்றியிருக்கும். இவ்வகைத் துணிகளில் நிறம் ஆழ்ந்திருக்கும். வெளுப்பதற்கு முன்அவற்றின் சாயம் திடமானதா என ஆய்வு செய்தல்வேண்டும். ஏனெனில், இவ்வகைத் துணிகளில் சாயக்கசிவு (bleeding) நேரக் கூடும். விரும்பத்தக்க கோடுகளையும் கட்டங்களையும் உருவாக்கும் பொருட்டுப் பல வகை நிறம் கொண்ட நூல்களைப் பயன்படுத்தி நெய்யப்படும். பாவு நூல் நிறம் கொண்டதாகவும், நிரப்பு நூல் வெண்ணிறமுடையதாகவும் இருப்பின், துணிகள் நெய்யப்பட்ட துணி சாம்ப்ரேஸ் (chambrays) எனப்படும். மற்ற வகை வண்ண நூல் கலவைகளால் உருவாக்கப்பட்ட துணிகளாவன: சீர்சக்கர் (seersucker), ஜிங்காம் (gingham), மேய்ப்பர் கட்டம் (shepherd's check), பிளெயிட்.
நூலுக்குச் சாயமேற்றுதலில் பின்வரும் நான்கு வழிமுறைகள் உள்ளன: நூற்கண்டு அல்லது சிட்டத்தைச் சாயமிடுதல் (skein or hank dyeing), துளைக் குழல் சாயமிடல் (package dyeing), பாவுத் தண்டு சாயமிடல் (warp—beam dyeing), விட்டு விட்டுச் சாயமிடல் (space dyeing). நூற்கண்டு சாயமிடல் முறையில் நூற்கண்டுகளைக் கம்பிப் படிச் சட்டத்தில் தொங்க விட்டுச் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். சாய நிறம் நன்கு நூலினுள் ஊடுருவும் என்றாலும், இது ஒரு செலவு மிக்க முறையாகும். கூம்பிய நூற்கண்டாகவோ, உருளை மீது சுற்றியோ துளையிடப்பட்ட தண்டுகளின் மீது அடுக்கி, சாயத்தை அவற்றின் வழியே அழுத்தத்தில் வெளியே பாய்ச்சி, மீண்டும் உட்புறமாகச் செலுத்துதல் துளைக் குழல் சாயமிடலாகும். பின்னல் வகைத் துணிகள் இம்முறையில் சாயமேற்றப்படுகின்றன.
பாவு உருளையிலேயே துளையை உருவாக்கிச் சாயத் தொட்டியில் மூழ்க வைத்தல் மூன்றாம் முறையாகும். விட்டு விட்டுச் சாயமிடல் முறையில் நூலைப் பின்னல் வகைத் துணியாக்கித் தேவைப்படும் நீள் வளையத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பின்னப்பட்ட துணியைச் சாயமேற்றி, பின்னலைப் பிரித்து விட வேண்டும். நீள் வளையப் பகுதிகளில் சாயம் உட்புகுந்திருக்கும். ஆனால், நூல்கள் குறுக்கிடும் பகுதிகள் சாயமேற்கா. மாறாக, சரியான இடைவெளிகளில் அமைக்கப்பட்ட மாறுபட்டசாயத் தொட்டிகளின் வழியே நிமிடத்திற்கு 900 மீட்டர் என்ற விரைவில் நூல்களைச் செலுத்திப் பல வண்ண விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 90)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/34pwkdv9/
தமிழ்“சாய நூல் துணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/34pwkdv9/APA
Oliyon Research. (2026). சாய நூல் துணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/34pwkdv9/MLA
"சாய நூல் துணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/34pwkdv9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment