சிறு நாய் விண்மீன் குழு
ciṟu nāy viṇmīṉ kuḻu
ஓரியன் விண்மீன் குழுவிற்கு அருகில் வட வான கோளத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குளிர் கால விண்மீன் குழு சிறு நாய் விண்மீன் குழு (canis minor) ஆகும்.
ஓரியன் விண்மீன் குழுவிற்கு அருகில் வட வான கோளத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குளிர் கால விண்மீன் குழு சிறு நாய் விண்மீன் குழு (canis minor) ஆகும். இவ்விண்மீன் குழுவின் அமைப்பு ஒரு சிறிய நாய் போல் இருப்பதால், இப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது 7 மணி 30 நிமிட வல ஏற்றத்திலும் (right ascension), +5° நடுவரை விலக்கத்திலும் (declination) அமைந்துள்ளது. இவ்விண்மீன் குழு, வான நடுவரைக்கு வடக்கே 5° இல் அமைந்துள்ளமையால், பெரும்பாலும் உலகில் எப்பகுதியிலிருந்தும் காண இயலும். இக்குழு வான கோளத்தில் 183 சதுரப் பாகை இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது. இவ்விண்மீன் குழுவில் உள்ள விண்மீன்களில் மிகவும் அதிக ஒளியுடையது புரசியான் (procyon) என்னும் ஓர் இரட்டை விண்மீன் (binary star) ஆகும். —பெ. வடிவேல்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 350)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33nnc3tc/
தமிழ்“சிறு நாய் விண்மீன் குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/33nnc3tc/APA
Oliyon Research. (2026). சிறு நாய் விண்மீன் குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/33nnc3tc/MLA
"சிறு நாய் விண்மீன் குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/33nnc3tc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment