சிங்சைட்
ciṅcaiṭ
இது துத்தநாகத்தின் உலோகக் கனிமம் (ZnMn)O ஆகும்.
இது துத்தநாகத்தின் உலோகக் கனிமம் (ZnMn)O ஆகும். சிங்சைட் அறுகோணப் படிகத் தொகுதியைச் சார்ந்தது. இது அரை உருவ வகையில் (hemi morphic) அடங்கும். இதில் இயற்கைப் படிக வடிவங்கள் மிக அரிதாகக் காணப்படுகின்றன.
பொதுவாக இது படலங்கள் (foliated massive) அல்லது பெருந்திரளால் (coarse) ஆனதாகக் காணப்படும். திண்துகள் வய அமைப்புகளோடும் காணப்படும். இதன் அணுக்கட்டமைப்பு கிரீனக்கைட், உட்சைட் ஆகியவற்றின் அணுக் கட்டமைப்புடன் மிகவும் தொடர்புடையதாகக் காணப்படும்.
அடி இணை வடிவுப் பக்கத்தில், நேர் பிளவையும், பட்டகப் பக்கத்தில் குறிப்பிடக் கூடிய அளவில் பிளவையும் கொண்டிருக்கும். இதன் முறிவு, குறை சங்கு முறிவு ஆகும். எளிதாக உடையக் கூடியது. கடினத் தன்மை 4—4.5 வரை இருக்கும். இதன் அடர்த்தி எண் 5.43—5.7 வரையாகும். மிளிர்வு குறை வைர மிளிர்வு ஆகும். துகள் நிறம் ஆரஞ்சு—மஞ்சள் ஆகும். இதன் நிறம் இருண்ட சிகப்பு, இக்கனிமத்தின் நிறத்திற்கு மூல காரணமாக இருப்பது, இக்கனிமத்தோடு இணைந்து காணப்படும் மாங்கனீஸ் ஆக்சைடின் உட்செறிவு ஆகும். ஒளி கசியுந்தன்மை முதல் குறை ஒளி கசியுந்தன்மை வரை காணப்படும். இது நேர் (+) ஒளிக் குறி உடையது.
உட்செறிவு. துத்தநாக ஆக்சைடில் (ZnO), ஆக்சிஜன் 19.7% உம், துத்தநாகம் 80.3% உள்ளன. இத்துடன் மாங்கனீஸ் ஆக்சைடு சேர்ந்து காணப்படும். இக்கனிமம் அமிலங்களில் கரையும். பிறப்பிடக் குறிப்புகள். இக்கனிமம் அதிக அளவில் பிரான்கிளினைட், வில்லிமைட் கனிமத்தோடு சேர்ந்து காணப்படும். சில சமயங்களில் தாள் (lamella) படலங்களாக இளஞ்சிவப்புக் கால்சைட் கனிமத்தோடு காணப்படும். தனித்துக் காணப்படுவதில்லை. சிங்சைட், துத்தநாகத் தாதுவாகப் பயன்படுகிறது. —அ. வே. உடையனப்பிள்ளை நூலோதி. Marland P. Billings. Structural Geology, Third Edition, Prentice Hall of India Private Ltd. New Delhi, 1987.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 198)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32nf7wbd/
தமிழ்“சிங்சைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32nf7wbd/APA
Oliyon Research. (2026). சிங்சைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32nf7wbd/MLA
"சிங்சைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/32nf7wbd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment