என்பன ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்புக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் அதைச் செயற்படுத்தவும் அமைத்துக் கொள்கின்ற குழுக்களாகும். புரட்சி, பிரபுத்துவம், முடிராட்சி போன்ற ஆட்சி அமைப்புகள் தோன்றுவதற்கு முந்திய பண்டை நாட்களிலேயே தன்னலக் குழுக்கள் (Cliques), தன்னலக் கும்பல்கள் (Factions) ஆகிய சமூக அமைப்புகள் குறிப்பிட்ட பிரபுவையோ செல்வாக்கான மனிதரையோ சுற்றி உருவாகிச் செயல்பட்டன. பாராளுமன்ற ஆட்சி அமைப்பு முறையின் தோற்றமும், அரசியல் கட்சிகளின் தோற்றமும் தொடக்கக்காலத்தில் இம்முறையை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்பது மட்டுமன்றி, வங்கியதிபர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் போன்ற செல்வர்களைச் சுற்றிப் புதிய தன்னலக் குழுக்கள் மற்றும் தன்னலக் கும்பல்களை உருவாக்கவும் வழிகோலியது. பிரபுக்களின் ஆதரவில் நடைபெற்று வந்த ஆட்சிகள் பின்னர்த் தொழிலதிபர் வணிகர்களின் ஆதரவில் நடைபெறத் தொடங்கியபோது பின்னவர்கள் தங்கள் குழுக்களை, அமைப்பு அளவிலான நிறுவனங்களாக முறைப்படுத்தி அவற்றின் வாயிலாக அதிகாரத்தைக் அரசியல் கைப்பற்றத் திட்டமிட்டனர். குறுகிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சிகளே கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் பொது மக்களின் ஆதரவிலான சிறியதும் பெரிதுமான அரசியல் கட்சிகளாக உருமாறின. இவ்வாறாக இக்கால முறையிலான அரசியல் கட்சிகள், பிரதிநிதித்துவம், பாராளுமன்ற முறை ஆகிய அமைப்புகளின் வளர்ச்சிப் பயனாய்க் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய பகுதிகளில் தோன்றின. சட்ட மன்றங்களில் ஒத்த கருத்துகளையும் கொள்கைகளையும் அணுகு முறைகளையும் கொண்ட உறுப்பினர்கள் இணைந்து செயல்பட முனைந்த போதும், பொதுமக்கள் வாக்குரிமை பெறத் தொடங்கிய போதும் அவர்களிடையே கட்சிகள் அமைக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் அரசியல் கட்சிகள் பரவத் தொடங்கின. ஆப்பிரிக்காவில் சிலபோது இனம் அல்லது பழங்குடிப் பிரிவுகளின் அடிப்படையில் கட்சிகள் உருவாக்கப்பட்டன. ஆசியாவில் சில பகுதிகளில் சமய அடிப்படையில் கட்சிகள் உருவாயின. ஓரளவு அரசியல், இராணுவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது அரசியல் கட்சிகள் என்பவை மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளிலும் செயல்படுகின்றன. பணிமுறைப்படியம் (Cadre), பலநாடுகளில் கட்சிகளின் அடிப்படையிலானவை என்றும் மக்களின் கூட்டத்தையே (Mass) அமைப்பாகக் கொண்டவை என்றும் பிரிக்கப்படும் இவை இரண்டின் கலப்பிலான கட்சிகள் பல உண்டு. அமைப்பு அடிப்படைக் கட்சிகள் என்பவை அரசியல் உணர்வு கொண்ட செயல் வீரர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டவை. இவை கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு காரணங்களை நோக்கமாகக் கொண்டு தோன்றின. மக்கள் கூட்ட அடிப்படைக் கட்சிகள் என்பவை ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கட்சிக்காரர்களாகக் கொண்டு திகழ்பவை. இங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்றியமையாததன்று. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் சோசலிசக் கட்சிகள் இவ்வாறு தோன்றின. எவ்வகைக் கட்சியாயினும், எவ்வகை அரசியல் அமைப்பாயினும், அவை ஒரு செயலில் பொதுவாகின்றன. ஏதேனும் ஓர் அளவில் ஆளுங்கட்சியாகவோ எதிர்க்கட்சியாகலோ–நாட்டின் அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதன் வாயிலாக நாட்டின் கொள்கைகளை நிருணயிக்கின்றன. புரட்சிக் கட்சிகளை, சட்டவரம்புக்குட்பட்ட கட்சிகளினின்று கோட்பாடு அடிப்படையில் பிரிப்பது எளிதெனினும், நடைமுறையில் எளிதன்று. தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தக் கட்சி அரசாங்கத்தில் எந்த அளவிற்குத் தலையிடலாம் என்னும் சிக்கல் எழுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீது அந்தக் கட்சியின் பிடி மெலிதான ஒன்றே. ஏனெனில் சட்டமன்றத் தகுதி அவர்களுக்கென்று சில தன்னுரிமைதளை — மன்ற நடவடிக்கை, அரசில் பங்கு, குறிப்பாக வாக்குரிமை — ஆகியவற்றை வழங்குகிறது. கட்டுறுதியான (Rigid), நெகிழ்வான (Flexible) கட்சிகள் என்பனவற்றை அவற்றின் கட்டுப்பாடான, ஒன்றிணைக்கப்பட்ட செயலின் அடிப்படையில் வேறுபடுத்தலாம். அதுபோலவே ஆளுங்கட்சி, ஆட்சியில் இல்லாக் கட்சி ஆகியவற்றிற்கும் இப்பாகுபாடு பொருந்தும். எடுத்துக்காட்டாக, ஆளும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் போது எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவதும், ஆளுங்கட்சி மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படுவதும் இயல்பு. மிகுதியான மக்கள் தொகை கொண்ட நாட்டில், பிரதிநிதித்துவ மக்களாட்சி என்பது அரசியல் கட்சிகளின்றிச் செயல்பட இயலாது. தங்கள் பேராளரின் அரசியல் கொள்கை என்ன என்பதை வாக்காளர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள, வேட்பாளர்களின் கட்சிகள்தாம் எளிமையான சான்றாகும். மேலும் தனிமனிதர்களின் வாக்குறுதிகளைக் காட்டிலும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கொள்கைகளே வேட்பாளரை மக்களுக்கு எளிதாக அடையாளம் காட்டவல்லன. மக்களிடையே திகழும் பல்வேறு கருத்துக்களைச் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைத்துச் செயல்படும் ஆற்றல் கட்சிகளுக்கு உண்டு. மற்ற எல்லா அமைப்புகளையும் போலவே கட்சிகளும் தம் உறுப்பினர்களைத் தலைவர்களின் உட்கட்சி வட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. ‘பணிமுறைப்படிவக்’ கட்சிகளில் இச்செயலை அதிகாரம் மிக்க குழுக்களும், ‘மக்கள் கூட்டுக்’ கட்சிகளில் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும் நடைமுறைப்படுத்துகிறார்கள். மக்களாட்சி அரசியல் முறையில், பிரதிநிதித்துவம் என்பது, இதுபோன்ற உட்குழுக்களின் போட்டிச் செயல்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பாதும் நடைபெறுகிறது. எந்தப் புதிய மக்களாட்சியும் கட்சிகளின்றிச் செயல்பட முடியாது என்னும்போது மேற்கூறிய குழு மனப்பான்மை தேவையானதொரு குறைபாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது. கட்சி முறைகள், ‘ஒற்றைக் கட்சி’, ‘இரு கட்சி’ மற்றும் ‘பல கட்சி’ முறை எனப் பல வகைப்படும். இப்பாகுபாடு ஒரு நாட்டில் நிலவும் கட்சிகளின் எண்ணிக்கையாலன்றி, அக்கட்சிகள் வெளிக்காட்டும் வேறுபாடான தன்மைகளால் பாகுபடுத்தப்படுகின்றன. ‘இருகட்சி’, ‘பலகட்சி’ முறைகள், பல கூறுபாடுகளுடைய ஒரு சமுதாயத்தின் மாறுபாடான அரசியல் விருப்பு, வெறுப்புகளை நடைமுறைப்படுத்தும் மக்களாட்சி சாதனங்களாகப் பயன்படுகின்றன. பொது- வாக, அடிப்படையில் மாறுபாடான கருத்துகளைப் பொறுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளிலேயே ஒற்றைக் கட்சி முறை செயல்படுகிறது. ஆங்கிலோ–சாக்சன் நாடுகளில் ‘இரு கட்சி’ முறையே இயல்பானதென்றும் ‘பலகட்சி’ முறை விதி விலக்கானது என்றும் கருதுகின்றனர். ‘இரு கட்சி’ முறை கிரேட் பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் செயல்படுகிறது. எனினும் பலகட்சிகள் அங்கே நிலவுகின்றன. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் சமதருமக் கொள்கை, பழமையாளர் கட்சி, தாராளக் கொள்கையாளர் கட்சி ஆகிய இரண்டினுக்கும் புதிய பொதுச் சவாலாகத் தோன்றியது. சரிவிகிதப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பல கட்சிகள் தோன்றிச் செயல்படுவதற்கான சிறந்த காரணங்களில் ஒன்றாகும். அரசியல் கருத்து மாறுபாடுகளின் ஆழமான பிளவுகள் மற்றொரு காரணமாகும். பலகட்சி முறையில் பாராளுமன்றப் பெரும்பான்மை என்பது பொதுவாகக் கூட்டணியால் மட்டுமே பெறப்படுவதாகிறது. நிலையற்ற தன்மையும், பலக்குறைவும் அத்தகைய அரசுகளில் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது. கிரேட் பிரிட்டனிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ‘இரு கட்சி முறை’ செயல்படுகிறது. எனினும் இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. அமெரிக்கக் கட்சிகளில் குடியரசுக் கட்சியும், சனநாயகக் கட்சியும் ஒரே தாராளக் கொள்கைகளையுடைய இருவகையான கட்சிகளாகவே செயல்படுகின்றன. அவை நெகிழ்வுத் தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. கிரேட் பிரிட்டன் தொடர்ந்து இரு கட்சி முறையைப் பின்பற்றி வருகிறது. 1914–க்கு முன்பாகப் பழைமைக் கட்சியும் தாராளக் கொள்கைக் கட்சியும், 1935–இலிருந்து பழைமைக் கட்சியும், தொழிலாளர் கட்சியும் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க நாட்டுக் கட்சிகள் போலன்றிப் பிரிட்டனிலுள்ள கட்சிகள் கூட்டுறுதியும் கட்டுப்பாடும் கொண்டு விளங்குகின்றன. அதேபோல் இருகட்சியும் மக்களாட்சிப் பண்பில் நம்பிக்கையுடையவையாகவே திகழ்கின்றன. ‘ஒற்றைக்கட்சி’ முறைக்கு வரலாற்றில் பொதுவுடைமை நாடு, பாசிச நாடு, வளர்ந்து வரும் நாடுகள் ஆகியவற்றில் எடுத்துக்காட்டுகள் கிடைக்கின்றன. பொதுவுடைமை நாடுகளில் இக்கட்சி, நகர்ப்புறத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அறிவாளிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த முனைப்பாகி, ‘தொழிலாள சருவாதிகார’த்தை உருவாக்கச் செயல்படுகிறது. இந்நாடுகளில் அரசின் அதிகார முறையிலான தலைமையைவிடக் கட்சித் தலைமையே உண்மையான வலிமை மிக்க பகுதியாகிறது. ஆனால் பாசிசக் கட்சிகள், செருமனி நீங்கலாக, மற்ற நாடுகளில் முதன்மையான பங்கினை ஆற்றவில்லை. செருமனி கூடத் தேசிய சோசலிசக் கட்சி, தொடக்கத்தில் பெருஞ்சிறப்பினைப் பெற்றிருந்த போதிலும், பின்னர் இட்லர் தம் சிறப்புப் படையையும், கெசுட்டாபோமே என்ற இரகசியக் காவல் துறையையுமே பெரிதும் நம்பியிருந்தார் என்பது புலனாகிறது. ஆட்சிப் பொறுப்பிலமர்ந்த பின்னர் இத்தாலி, செருமனி நாட்டின் பாசிசக் கட்சிகளின் மக்கள் தொடர்பு குறையத் தொடங்கியதைக் காணமுடிகிறது. ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்காவிலுள்ள சில வளர்ந்துவரும் நாடுகளிலும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இது பெரும்பாலும் சற்றே சோசலிசம் அல்லது குறைந்தபட்ச முற்போக்கு நோக்கமுடையது என அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் அரசியல் கட்சிகள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தோன்றத் தொடங்கின. மேனாட்டுக் கல்வி கற்றவர்கள் இணைந்து, இந்திய நிருவாகப் பதவிகளில் உரிமை பெறும் பொருட்டும், இந்தியத் தன்மைகளைக் காக்கும் பொருட்டும் இந்திய தேசிய காங்கிரசைக் கி.பி. 1885–இல் பம்பாயில் தொடங்கினார்கள். மிதவாத அமைப்பாக இருந்த இது பின்னர்த் தீவிரவாதிகள் வசமாகியது. 1920–க்குப் பின்னர்க் காந்தி அடிகளின் வழி காட்டுதலில் ‘அகிம்சை’, ‘சத்தியாக்கிரகம்’ என்னும் வழிமுறைகளைப் பின்பற்றும் விடுதலை இயக்கமாக இவ்வமைப்பு மாறியது. இக்கால நிலையில் முசுலிம் லீக்கு, இலிபரல் கட்சி ஆகியவையும் 1920–க்கும் முன்னர்த் தோன்றின. இந்தியத் தேசியக் காங்கிரசு 1935–இல் இந்திய அரசியல் சட்டம் வந்த பிறகே சட்டசபைத் தேர்தல்களில் கலந்துகொண்டு ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாறியது. பொருளாதார, சமூகத் துறைகளில் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகளுக்கேற்பப் புதிய கட்சிகள் தோன்றும் சூழல்கள் உருவாயின. அதன்படி பெரும்பாலும் தொழிலாளர்களைக் கொண்ட கம்யூனிசுட்டுக் கட்சி இந்தியாவில் தோன்றியது. காங்கிரசுக் கட்சியினின்று பிரிந்து வந்த சிலர் புதிய கட்சிகளைத் தோற்றுவித்தனர். எம்.என். இராய் தோற்றுவித்த தீவிர சனநாயகக் கட்சியும், சுபாசு சந்திரபோசு தோற்றுவித்த முன்னேற்றக் கட்சியும் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். 1952–இல் தோன்றிய பிரசா கட்சி, கட்சியோடு 1952–இல் சோசலிசுட்டுக் இணைந்து பிரசா சோசலிசுட்டுக் கட்சியாக உருவாகியது. பின்னர் இராசாசியால் சுதந்திராக் கட்சி, தனியுடைமைப் பொருளாதார நோக்கோடு தோன்றி அவரோடு மறைந்தது. 1977–ஆம் ஆண்டில் நெருக்கடிக் கால முடிவில் காங்கிரசை எதிர்த்துப் பல்வேறு கட்சிகள் இணைந்து சனதாக் கட்சி என ஒரு கட்சியாக உருவாகி, முதன் முதலாகக் காங்கிரசு அல்லாத ஆட்சியை மையத்தில் தோற்றுவித்தபோதிலும், விரைவில் கட்சியின், உட்பூசலால் வீழ்ந்து சிதறி, மீண்டும் பலகட்சி முறைக்கு வழிவகுத்தது. தமிழகத்தில் 1916–இல் பார்ப்பனர் அல்லாதாரால் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நீதிக் கட்சி என விளங்கி மாநில அரசைக் கைப்பற்றியது. சமூகச் சீர்திருத்தத்தை முதன்மையாகக் கொண்டு பெரியார், ஈ.வே. இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1944–இல் திராவிடர் கழகம் எனப் பெயர் பெற்று விளங்கி வருகிறது. இந்கழகத்தினின்று அரசியல் இயக்கமாகப் பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான பணிமுறைவடிவம் பெற்ற கட்சியாக விளங்கி மாநில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனின்று பிரிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிக் கட்சியாக இயங்கி மாநில ஆட்சியை ஏற்று நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகள் வீழ்ச்சி நிலையில் உள்ளன என்று மேலை நாடுகளில் உள்ள சில பழைமை வாத வட்டாரங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றன. அவர்கள் கருத்துப்படி அரசியல் கட்சிகள் என்பவை பிரிவு சக்திகள், தேசிய ஒற்றுமையின் எதிரிகள், ஊழலுக்கு ஊற்றுக் கண்கள் என்றெல்லாம் வருணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அளவிலும் எண்ணிக்கையிலும் அரசியல் கட்சிகள் வீழ்ச்சி பெறவில்லை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றில் மட்டுமே நடைமுறையிலிருந்த அரசியல் கட்சிமுறை இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் தோன்றிச் செயல்பட்டு வருகிறது. எனவே, பெருமளவு தொழில் மயமாக்கப்பட்ட ஒரு நாட்டில் அரசியல் கட்சிகளின்றி மக்களாட்சி செயல்படுவதென்பது இன்று இயலாத காரியமாகும். புதிய உலகிம், அவை ஒரே உண்மையின் இரண்டு தோற்றங்களாகவும், ஒரே ஆடையின் உள் வெளிப் பகுதிகளாகவும் திகழ்கின்றன.பெ.செ. துணை நூல்கள் Maurice Duverger, “Les Partis Politiques”, 1951, Eng. Trans., Political Parties: Their organization and activity in the Modern State, 2nd ed., 1964. Joseph, G., “Lapalombara and MyronWeiner”, (eds), Political Parties and Political Development, 1966. Samuel, J., “Eldersveld, Political Parties: A behavioral Analysis,” 1964.